என் புருஷனுக்கு நான் தான் பொண்டாட்டி.. விட்டுக்கொடுக்க முடியாது.. சட்டென கோபமான நடிகை தேவயாணி..!

இயக்குனர்களை காதலித்து திருமணம் செய்த தமிழ் நடிகைகளில் நடிகை தேவயாணியும் ஒருவர். இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தேவயாணி.

சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம்  முதலே தேவயாணி டீசண்டான உடை அணிந்துதான் நடித்து வந்தார். சூரியவம்சம் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்றார் தேவயாணி.

அந்த சமயத்தில் சூரியவம்சம் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் ராஜகுமாரன். அப்பொழுது தேவையானிக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே பழக்கம் இருந்தது. பிறகு ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

தேவயாணி காதல்:

அந்த திரைப்படத்தில் தேவயாணி கதாநாயகியாக நடித்தார். அப்பொழுது இவர்களுக்குள் இவர்களுக்கு இடையே இருந்த காதல் அதிகமானது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தது தேவயாணியின் குடும்பத்திற்கு தெரிந்தது.

ஆனால் தேவயாணி குடும்பத்தார் இதை கடுமையாக எதிர்த்தனர். இருந்தாலும் தனது குடும்பத்தின் எதிர்ப்பை எல்லாம் மீறி தேவயாணி ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக திருமணத்திற்கு பிறகு நடிகைகள் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள்.

ஆனால் அதற்குப் பிறகும் திரைப்படங்களில் நடித்தார்  தேவயாணி பார்த்திபன் கதாநாயகனாக நடித்த அழகி என்கிற திரைப்படத்தில் தேவயாணி பார்த்திபனுக்கு மனைவியாக நடித்தார். இந்த திரைப்படத்தில் பார்த்திபனின் காதலியாக நந்திதா தாஸ் நடித்தார்.

திருமணத்திற்கு பின் படம்:

இளமை காலங்களில் காதலித்து அந்த காதலில் தோல்வி அடைந்திருப்பார் பார்த்திபன். அதற்குப் பிறகு அவர் தேவயாணியை திருமணம் செய்து இருப்பார். நிகழ்காலத்தில் திரும்பவும் தனது காதலியை பார்க்கும் பொழுது அவர் கஷ்டப்படும் நிலையில் இருப்பது பார்த்திபனால் பொறுத்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கும்.

மனைவி மற்றும் காதலி இருவருக்கும் இடையே பயணிக்கும் பார்த்திபனின் கதாபாத்திரத்தை வைத்துதான் மொத்த படமும் நடந்து கொண்டிருக்கும். சிறப்பான படம் என பலரால் பேசப்பட்ட அந்த திரைப்படம் குறித்து தேவயாணி தனது பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் கூறும்போது திருமணத்திற்கு பிறகு எனக்கு கையெழுத்தான முதல் திரைப்படம் அழகி. அழகி திரைப்படத்தில் நடித்த பிறகு அந்த திரைப்படம் பெண்களை விடவும் ஆண்களுக்கு தான் அதிகம் பிடித்திருந்ததை பார்த்தேன் ஏனெனில் ஆண்கள் அனைவருமே அவர்களுடைய பழைய காலங்களில் ஏதோ ஒரு காதல் தோல்வியை கண்டுவிட்டு தான் வந்திருக்கிறார்கள்.

இதனால் அவர்களுக்கு நெருக்கமான படமாக அழகி திரைப்படம் இருந்தது அந்த திரைப்பட கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னதான் காதலி திரும்ப வருகிறாள் என்றாலும் இறந்த காலம் இறந்த காலம் தான் இப்பொழுது நான் உன்னை திருமணம் செய்து கொண்டேன் எனது கணவன் எனக்கு மட்டும்தான் என்னும் அந்த கதாபாத்திரம் பிடித்து இருந்தது என்று தேவயாணி கூறியிருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version