கடன்.. மதுவுக்கு அடிமை.. கவர்ச்சி கன்னி.. சிவாஜி.. கண்ணதாசனுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை..!

திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகைகள் திரை உலகில் உச்சத்தை தொடும் போது ஏற்படுகின்ற சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. அந்த வகையில் ரசிகர்களின் மனதில் கொஞ்சும் கிளியாய் இருந்த இந்த நடிகை சிவாஜி மற்றும் கண்ணதாசனுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய அம்மா கொடுத்த தொடர்ந்து டார்ச்சரால் இன்ஸ்டன்ட் ஆக ஒருவரை விரும்பி உடனடியாக காதல் திருமணத்தை செய்து கொண்டு மது மற்றும் கடனால் பாதிக்கப்பட்ட நடிகை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

கடன் மதுவுக்கு அடிமை..

நடிகை தேவிகா பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்று இருந்தவர்.

மேலும் அந்தக் காலத்தில் தமிழில் முன்ணனி நடிகர்களாக விளங்கிய பல நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் கவிஞர் கண்ணதாசன் உடன் அப்படி இப்படி இருந்ததாக அந்த கால கட்டத்தில் கிசுகிசுக்கள் அதிகளவு வெளி வந்துள்ளது.

எனினும் அது எந்த அளவு உண்மை என்று தெரியாத நிலையில் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது நாட்டுக்காக நிதி திரட்ட கூடிய பணியில் கண்ணதாசன் ஈடுபட்ட சமயத்தில் அவரை விமானத்தில் அழைத்துச் செல்லும் போது அவருக்கு துணையாக தேவிகா சென்றதும் அவருடன் அமர்ந்து பயணித்ததும் கிசுகிசுக்களாக பல்வேறு வகைகளில் வெளி வந்திருந்தது.

அது மட்டுமல்லாமல் தேவிகாவை எப்படியும் சினிமாவில் முன்னணியில் கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கவிஞர் கண்ணதாசனும் அவருக்காக வாய்ப்புகளைத் தேடிப் பெற்றுத் தர சிபாரிசுகளை செய்திருக்கிறார்.

மேலும் தேவிகா சிவாஜி கணேசனோடு இணைந்து நடிக்கும் போது அவரோடு இணைத்து பேசப்பட்டார். இந்த விஷயம் ஊடகங்கள் மட்டுமல்லாமல் வீட்டில் இருந்த அவரது அம்மாவிற்கும் சந்தேகம் ஏற்பட்டு தேவிகாவிடம் நேரடியாகவே இது பற்றி கேட்டிருக்கிறார்.

கவர்ச்சி கன்னியாய் வலம் வந்த நடிகை..

எனினும் அப்படி இல்லை என்று நடிகை தேவிகா கூறினாலும் ஒவ்வொரு நாளும் என்ன நீ சிவாஜி கணேசன் கல்யாணம் பண்ணிக்க போறியா? எப்ப வீட்டை விட்டு ஓடுவ என்பது போன்ற வார்த்தைகளால் தொடர்ந்து டார்ச்சர் செய்வதை அடுத்து பீம் சிங்கிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தேவதாசை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து தேவதாஸ் தேவிகா சம்பாதித்து இருந்த பணத்தில் படம் ஒன்றை எடுக்க ஆசைப்பட சொந்தமாக தேவிகா தயாரித்த இந்த படமானது கடுமையான தோல்வியை சந்தித்து கடன் சுமையை தந்தது.

மேலும் சிங்கப்பூர் நண்பர்களின் கூட்டு முயற்சியால் தெலுங்கிலும் ஒரு படத்தை எடுத்து அந்தப் படமும் பிளாப்பாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முத்தி இருவரும் பிரிய கூடிய நிலைக்கு ஆளானார்கள்.

எனினும் மீண்டும் தேவிகா கோர்ட்டுக்கு செல்லாததை அடுத்து இந்த வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இவர்களுக்கு கனகா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது.

சிவாஜி கண்ணதாசனுடன் கிசுகிசுப்பில் சிக்கியவர்..

மேலும் தேவிகா கண்ணதாசனோடு பயணித்த சமயத்தில் மது அருந்த கூடிய பழக்கம் ஏற்பட்டதாகவும் இருவரும் ஒன்றாக மது அருந்துவதாகவும் செய்தித்தாள்களில் பரபரப்பாக செய்திகள் வந்த காலமும் உண்டு.

எப்படி மதுவுக்கும் அடிமையான தேவிகா மெல்ல மெல்ல உடல் எடை கூடியதை அடுத்து திரைப்படங்களில் அதிக அளவு நடிக்க முடியாமல் போனது.

மேலும்  பட தயாரிப்பாளராக மாறியதை அடுத்து கடன் சுமை ஒரு பக்கம் அதிகரித்ததை அடுத்து மனநிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தோடு இருந்த இவர் கடைசியாக இப்படியும் ஒரு பெண் என்ற படத்தில் நடித்து முடித்ததை அடுத்து மரணம் அடைந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version