சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் சீரியல் நடிகை தேவிப்பிரியா. மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பெண் சிசுவதை குறித்த ஒரு ஆவணப்படத்தில் நடித்திருந்தார்.
இவருடைய இந்த நடிப்பு கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. அதனை தொடர்ந்து உயிருக்கு உயிராக நடிகர் அஜித்துடன் வாலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவில் பயணித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் முழுநேர சீரியல் நடிகையாக தன்னை மாற்றிக் கொண்டார். வெள்ளி திரையில் சில திரைப்படங்களில் மட்டுமே இருக்கும் இவ்வாறு சீரியலில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
வில்லத்தனமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி குடும்ப பாங்கான ஹீரோயின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி புகுந்து விளையாடுவார் அம்மணி. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்தி பொண்ணு என்ற சீரியலில் தன்னுடைய பிரமாதமான நடிப்பு மற்றும் அழகான வசனம் உச்சரிப்புகளை உச்சரிப்புகளின் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றார்.
சில சீரியல்களில் போலீஸ் அதிகாரியாகவும் அமைந்திருக்கிறார். 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தேவிப்ரியா. இவருடைய குண்டு குண்டு கண்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
வாட்டசாட்டமான தோற்றம்.. எடுப்பான முன்னழகு.. பார்த்ததும் சுண்டி இழுக்கும் முகவட்டு.. என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அத்தனை அம்சங்களையும் தனக்குள் கொண்டிருக்கும் நடிகை தேவிப்ரியா ஆரம்பகாலத்தில் சில சர்ச்சைகள் சிக்கினார்.
வார பத்திரிகைகளில் இது குறித்த தகவல்கள் வெளியாகி இவருடைய பெயரை டேமேஜ் பண்ணியது. ஆனால், தற்போது அதை எல்லாம் விட்டுவிட்டு தற்பொழுது சீரியல்களில் நடித்து வரும் இவ்வாறு சமீபத்தில் பேட்டி ஒன்று கலந்து கொண்டார்.
அதில் பேசிய அவர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து சில விஷயங்களை வெளிப்படையாக கூற்றுமே இல்லாமல் பேசி இருக்கிறார். பல நடிகைகள் இது குறித்து கேள்வி எழுப்பினால் கூச்சப்பட்டு கொண்டு அப்படி எதுவும் எங்களுக்கு நடக்கவில்லை அப்படியே நடந்தது என்று கூறினாலும் எல்லா துறையிலும் இது நடக்கிறது என்று நழுவி விடுவார்கள்.
ஆனால், தேவிப்ரியா கூறியதாவது, பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லவே இல்லை என்று நான் கூற மாட்டேன். அந்த பழக்கம் இருக்கிறது. எப்படி அழைப்பார்கள் என்றால்.. ஒரு பெரிய வாய்ப்பு மற்றும் பெரிய சம்பளம் நம்மை தேடி வரும் நாமும் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடிக்கப் போகிறோம் என்று ஆசையுடன் இருப்போம்.
அப்போது இந்த ஒரு கோரிக்கையுடன் அணுகுவார்கள். நாம் ஒரு மனக்கோட்டை கட்டி வைத்திருப்போம். நமக்கு இவ்வளவு வருமானம் வரப்போகிறது இந்த விஷயத்தில் நடிக்கப் போகிறோம் என்றெல்லாம் ஒரு கனவு கண்டு கொண்டிருப்போம்.
அந்த நேரத்தில் இப்படி ஒரு கோரிக்கையை முன் வைப்பார்கள் ஏற்றுக்கொண்டால் தான் அந்த கனவு மெய்ப்படும் அல்லது அது வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை தான். என்னிடம் இது போல் சிலர் கேட்டிருக்கிறார்கள். மிகவும் சாந்தமாக இப்படியான கோரிக்கைகளை வைப்பார்கள் பிடித்திருந்தால்.
உங்களுக்கு பிடித்திருந்தார் நீங்கள் செய்யலாம் என்று கூறுவார்கள். பிடிக்கவில்லை என்றால் வாய்ப்பு கிடைக்காது அவ்வளவுதான். ஆனால், நான் யோசிக்க மாட்டேன்.. நான் அப்படியான ஆள் கிடையாது.
அந்த கேட்டகிரியில் நான் வரமாட்டேன் என்று கூறி அனுப்பி விடுவேன். இதனால் பல பட வாய்ப்புகளை நான் இழந்து இருக்கிறேன் என்று வெளிப்படையாக தன்னுடைய சினிமா குறித்தான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை தேவிப்ரியா.