“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இருவர் தரப்பிலும் பெற்றோர்கள் சம்மதித்து, இந்த காதல் திருமணம் கோலாகலமாக நடந்தது.

தனுஷ் – ஐஸ்வர்யா

தனுஷ் – ஐஸ்வர்யா திருமணமாகி, 18 ஆண்டுகளாக இருவரும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டனர். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகளுக்கு தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் பெற்றோர் ஆகினர்.

தனுஷ் தொடர்ந்து நல்ல நல்ல கேரக்டர்களின் நடித்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரானார்.

இப்போது அவர் ராயன் என்ற தனது 50 வது படத்தை அவரே டைரக்ட் செய்து, நடித்து வருகிறார். அதேபோல் அடுத்து இளையராஜா என்ற படத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இதில், அவரது சம்பளம் 50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார். இது தவிர சேகர் கம்முலா என்ற தெலுங்கு பட இயக்குனர் தெலுங்கு பட இயக்குனர் இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லால் சலாம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை டைரக்ட் செய்து இருந்தார். இப்போது சமீபத்தில் லால் சலாம் என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த மூன்று படங்களுமே, பிளாப் படங்களாக போய்விட்டன.

இதையும் படியுங்கள்: அதை பெருசு பண்ண ஊசி போட்டுகிட்டேன்.. கூச்சமின்றி கூறிய பிரபல நடிகை…!

இருவரும் பிரிவதாக அறிவிப்பு

கடந்த 2004ம் ஆண்டு முதல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட தனுஷ் ஐஸ்வர்யா 18 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக தங்களது டிவிட்டர் பக்கங்களில் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் இருவரும், தங்களுக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுதாக்கல் செய்த போது, நீதிபதி அவர்கள், தனுஷ் ஐஸ்வர்யா இருவரிடம் கேட்ட ஒரே கேள்வி, விவாகரத்து கேட்டு இருவரும் மனம் ஒத்து பிரிவதாக தெரிவித்துள்ளீர்கள்.

ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு காரணம்

ஆனால் நீங்கள் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழேவ முடியாது; பிரிந்துதான் ஆக வேண்டும் என்பதற்கான ஒரு சரியான காரணத்தை, மதிப்பான ஒரு காரணத்தை, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சரியான காரணத்தை இதுவரை நீங்கள் சொல்லவில்லை.

அப்படி ஒரே ஒரு காரணத்தை மட்டும் சொல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு விவாகரத்து சட்டரீதியாக அளிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. எந்த சிரமமும் இல்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: ஜோவிகா டான்ஸ்.. தீயாய் பரவும் வீடியோ.. ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க..!

சரியான காரணங்கள் இல்லை

இதன் மூலம் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்துக்காக கூறிய காரணங்கள் எதுவுமே சரியான காரணங்கள் இல்லை. நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களாக அவைகள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

நேரில் ஆஜராக உத்தரவு

எனினும் வரும் அக்டோபர் 7ஆம் தேதி ஆறு மாதங்கள் கழித்து, இருவரையும் கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி இந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளார்.

விவாகரத்துக்கு சரியான ஒரு காரணம் மட்டும் சொல்லுங்க என்ற நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி, அவரை திக்குமுக்காட வைத்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam