விசித்திர கோரிக்கை.. கோர்ட்டுக்கு வந்த விவாகரத்து.. ஐஸ்வர்யா கொடுத்த மனுவால் வெடித்த சர்ச்சை…!

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்த பல நடிகர், நடிகையர் ஜோடி ஒரு கட்டத்தில் பிரிவை சந்தித்து இருக்கிறது. பல ஆண்டுகள் வாழ்ந்த பிறகும் திடீரென பிரிந்த பல நட்சத்திர ஜோடிகள் இருக்கவே செய்கின்றனர். உதாரணமாக பார்த்திபன் – சீதா, கமல்ஹாசன் – சரிகா, ராமராஜன் – நளினி என பலரை சொல்ல முடியும். அந்த வரிசையில் இப்போது மற்றொரு முக்கிய நட்சத்திர ஜோடி விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா காதல் திருமணம்

இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன், செல்வராகவன் தம்பி நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இருவரும் காதலித்த நிலையில் கடந்த 2004ம் ஆண்டில், நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

கடந்த 2022ல் பிரிவு

17 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை சுமூகமாக நீடித்த நிலையில், இந்த நட்சத்திர தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே அவர்களது டிவிட்டர் பக்கத்தில் நாங்கள் மனம் ஒத்துப்போய் இருவரும் பிரிகிறோம் என பதிவு செய்தது, தமிழ் சினிமா சார்ந்தவர்களைஎயும், ரசிகர்களையும் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆனால் 2 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் இவர், மீண்டும் தங்களது கோபதாபங்களை மறைந்து வாழ்க்கையில் இணைவார்கள் என எதிபார்த்திருந்த நிலையில் இப்போது, விவாகரத்துக்கு தயாராகி விட்டனர்.

குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல்

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தது பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கோரிக்கையை பார்த்து தனுஷின் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் இதனால் சர்ச்சை வெடித்திருக்கிறது.

செல்லாத திருமணம்

இருவரும் திருமணம் செய்து கொண்டோம். விவாகரத்து வேண்டும் என்று கூறுவதுதான் இயல்பு. பரஸ்பரம் அப்படித்தான் இதுவரை விவாகரத்து கோரி இருக்கிறார்கள் ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து இந்த திருமணத்தை செல்லாத திருமணம் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: படுக்கையில் என்னை திருப்தி படுத்துவியா..? 10 நிமிடத்தில் ஹோட்டல் ரூமில் நடிகை அரங்கேற்றிய கூத்து..!

செல்லாத திருமணம் என்றால் தன்னுடைய கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது தனக்கிருந்த நோய்கள் அல்லது வேறொரு பெண்ணுடன் இருந்த தொடர்பு ஆகியவற்றை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் செல்லாத திருமணம் என அறிவிக்க வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில்தான் இதுபோன்ற வழக்கத்தில், விவாகரத்து கேட்டு கோரிக்கைகள் எழுப்பப்படுவது வாடிக்கை.

வெடித்தது சர்ச்சை

ஆனால் திருமணம் முடிந்து 18 ஆண்டுகள் வாழ்ந்து தற்பொழுது திருமணம் செய்து கொள்ளும் வயதில், 2 மகன்கள் இருக்கும் நிலையில், என்னுடைய திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கோர்ட் படி ஏறி இருப்பது சர்ச்சையை வெடிக்க வைத்திருக்கிறது. இதனால் தனுஷ் அப்படி என்னதான் செய்தார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: சித்தார்த்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? ப்பா.. இப்படியொரு அழகா.. வியக்கும் ரசிகர்கள்..!

இப்படி ஒரு விசித்திர கோரிக்கையுடன் கோர்ட்டுக்கு வந்துள்ளது இந்த விவாகரத்து. ஐஸ்வர்யா கொடுத்த இப்படி ஒரு மனுவால் சர்ச்சை வெடித்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version