தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு முதன் முதலில் எப்படி நடந்தது..? யார் காரணம்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில், துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த அவர், அடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் என்ற படத்தில் நடித்து மிகப் பிரபலமானார்.

ஒல்லிப்பிச்சான் நடிகர்

முதலில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று விமர்சிக்கப்பட்ட தனுஷ், தொடர்ந்து திருடா திருடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்து, முன்னணி நடிகராக இப்போது தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ராயன்

தனுஷ், தனது 50வது படமான ராயன் படத்தை அவரே டைரக்ட் செய்து கதாநாயகனாக நடித்துள்ளார். அது மட்டுமின்றி தனது அக்கா மகன் ஹீரோவாக நடித்த, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் டைரக்ட் செய்து முடித்துள்ளார்.

இப்போது தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா டைரக்சனில் குபேரா என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இளையராஜா கேரக்டரில்

அத்துடன் இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படமான இளையராஜா படத்தில் தனுஷ்தான், இளையராஜா கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.

கோர்ட்டில் மனுதாக்கல்

இதற்கிடையே நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது பலத்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டீன் ஏஜ் வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், இப்படி ஒரு முடிவை தனுஷூம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் எடுத்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படியுங்கள்: தனுஷிற்கு இரண்டாம் திருமணம்.. சொன்னது யாருன்னு பாருங்க..! வெடித்த சர்ச்சை..!

இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ரஜினி வீட்டில் தனுஷ் குடும்பத்தினருக்கு குறிப்பாக அவரது பெற்றோருக்கு நேர்ந்த அவமானங்களும் இழிவான பேச்சுக்களமே இந்த முடிவை எடுக்க தனுஷ் எடுக்க காரணம் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி ஐஸ்வர்யா – தனுஷ் இருவருக்கும் இடையே நீடித்த கருத்து வேறுபாடுகளும் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே நடிகர் தனுஷ், முதன் முதலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சந்தித்தது எப்படி, யார் மூலம் சந்தித்தார் என்பது குறித்து பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

ஹாய் மட்டும் சொன்னேன்

நான் காதல் கொண்டேன் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு கிளம்ப தயாரானேன். அப்போது தியேட்டர் உரிமையாளர் வந்து, ரஜினியின் மகள்கள் என்று ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் அவர்களிடம் ஹாய் மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

இதையும் படியுங்கள்: சினிமாவுல மட்டும் இப்படி காட்டுனா எல்லாரும் மட்டை தான்.. கிளாமரில் இறங்கி அடிக்கும் காயத்ரி ஷங்கர்..!

தொடர்பில் இருங்கள்

அடுத்த நாள் ஐஸ்வர்யா எனக்கு பூங்கொத்து ஒன்று அனுப்பி, தொடர்பில் இருங்கள் என்று கூறியிருந்தார் அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசி பழக ஆரம்பித்தோம். நாளடைவில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டு, இரண்டு வருடங்கள் காதலித்த பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டோம், என்று அதில் தனுஷ் கூறியுள்ளார்.

சினிமா தியேட்டரில்தான்…

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு முதன் முதலில் சினிமா தியேட்டரில்தான் நடந்துள்ளது. தியேட்டர் உரிமையாளர்தான் அந்த சந்திப்பு காரணம் என்ற தகவல் பலருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version