தனுஷின் ரகசிய காதல்.. விவாகரத்திற்கு காரணமே அது தான்.. குழந்தைகளை கவனிக்காத சோகம்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில், தங்களது டிவிட்டர் பக்கங்களில் நாங்கள் இருவரும் மனமுவந்து பிரிவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது விவாகரத்து இருவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். வரும் அக்டோபர் 7ம் தேதி இருவரையும், சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனுஷ் – ஐஸ்வர்யா

இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்தோஷ் ஜோசப் கூறியிருப்பதாவது, ஐஸ்வர்யாவும் தனுஷும் திருமணம் செய்து கொள்வதற்கும் முன்பே பல காதல்களில் இருந்தனர். அவர்களுக்கு 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இருவரும் வெவ்வேறு சாதி அமைப்பினர் என்பதால், லதா ரஜினிகாந்த் குடும்பத்தில் இதற்கு பயங்கரமான எதிர்ப்பு இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

அதே நேரத்தில் ரஜினிகாந்த் குடும்பத்தில், கஸ்தூரி ராஜா குடும்பத்துக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

பல காதல்கள்

திருமணத்திற்கு பின்பும் தனுஷ்க்கு பல காதல்கள் இருந்தன இதற்கிடையே ஐஸ்வர்யாவும் ஒரு நபரை காதலித்து வருகிறார். இருவரும் 2022 ஆம் ஆண்டு பிரியப் போவதாக அறிக்கை வெளியிட்டனர். அதன் பின்னரும் இருவருக்கும் இடையே சில முட்டல் மோதல்கள் இருந்தன.

தனுஷ் தரப்பில் இருந்து, அவர் ஒரு உதவி இயக்குனருடன் பழகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் இதற்கு ஐஸ்வர்யா தரப்பில் இருந்து, தனுஷ் மட்டும் என்ன யோக்கியமா. அவர் அன்றே பெரிய நடிகர் மகளுடன் நெருக்கமாக இருந்தவர்தானே என்று குற்றம் சாட்டுகின்றனர்.

2வது திருமணம்

இன்னும் ஆறு மாதங்களில் விவாகரத்து கிடைத்துவிட்டால், தனுஷூக்கு தங்கள் சாதியிலேயே ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கஸ்தூரிராஜா முடிவெடுத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா தரப்பிலும் அந்த உதவி இயக்குனரையே அவருக்கு திருமணம் செய்து வைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது என்று அந்த பத்திரிகையாளர் கூறியிருக்கிறார்.

நாக்குப்பூச்சி நடிகர்

மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு இது குறித்து பேசுகையில், தனுஷ் ரஜினி வீட்டில் மாப்பிள்ளை ஆனபோது, நாக்குப்பூச்சி போல இருந்து கொண்டு இவன் ரஜினி வீட்டுக்கே மாப்பிள்ளை ஆகிட்டானே என்று சக நடிகர்களை தனுஷைபார்த்து பொறாமைப்பட்டனர்.

2004 ஆம் ஆண்டு தனுஷின் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த பொழுது ஒட்டுமொத்த மீடியாவும் அங்கேதான் இருந்தது. தனுஷ் மீது பலவிதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.ஆனால் அதை எல்லாம் மீறி, தனுஷ் ஐஸ்வர்யாவின் வாழ்ந்து வந்தார்கள்.

மரியாதை தரவில்லை

தனுஷ் அப்பா அம்மா இருவரும், ரஜினி வீட்டுக்கு செல்லும்போது அங்கு அவர்களை சரிவர கவனிக்கவில்லை; மரியாதை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அதில் ஆரம்பித்த பிரச்சனை தான் பூதாகரமாக வெடித்ததாகவும் தெரிகிறது.

இந்த கோபத்தில் தான் நடிகர் தனுஷ், அதே போயஸ் கார்டனின் மிகப்பெரிய ஒரு அரண்மனை போன்ற வீட்டை கட்டி தன்னுடைய அப்பாவை அம்மாவையும் அங்கு இருக்க வைத்திருக்கிறார்.

குழந்தைகளை கண்டுக்கொள்ளாத சோகம்

என்றாலும் ஒரு கட்டத்தில் தங்களது லிங்கா, யாத்ரா என்ற 2 குழந்தைகளையும்
கண்டுக்கொள்ளாமல், இருவரும் 18 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து விட்டு விவாகரத்து சம்மதித்து இருக்கின்றனர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தனுஷின் ரகசிய காதல்கள், விவாகரத்திற்கு காரணமே அது தான் என்பது மட்டுமின்றி, உதவி இயக்குனர் மீதும் காதல் வசயப்பட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த நிலையில் தங்களது குழந்தைகளை கவனிக்காமல் இருவரும் பிரிவில் காட்டும் வேகமே மிகப்பெரிய சோகமாக மாறியிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version