சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டால், அதுபற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் மிக அதிகமாக இருக்கிறது. அதுவும் நடிகரின் மனைவி, பிள்ளைகள் குறித்த தகவல்களை அறிந்துக்கொள்வதில் பலருக்கு அலாதியான ஒரு ஆர்வம் காணப்படுகிறது.
தனுஷ் – ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2004ம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.
கடந்த 2022 முதல் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் இந்த நட்சத்திரத் தம்பதி, சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். இருவரையும் வரும் அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு
இந்நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதியின் மகன் லிங்கா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதாகவும், அதில் அவர் வாங்கிய மதிப்பெண் குறித்தும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 6ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது. இதை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் நடிகர் தனுஷின் இரண்டாவது மகன் லிங்கா, 10ம் வகுப்பு தேர்வு எழுதியதாகவும், அவருடைய மதிப்பெண் பட்டியல் இதுதான் என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
91.55 சதவீதம் தேர்ச்சி
10ம் வகுப்பு பொதுத் தேர்வை மொத்தம் 8 லட்சத்து 94 ஆயிரம் பேர் பங்கேற்று எழுதியிருந்தனர். இதில் 8 லட்சத்து 18 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம்ஆகும்.
லிங்கா பெற்ற மதிப்பெண்
நடிகர் தனுஷ் இரண்டாவது மகன் லிங்கா, 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 88 இங்கிலீஷில் 90, கணிதம் 96, அறிவியல் 99 மற்றும் சமூக அறிவியல் 87 மதிப்பெண் பெற்றிருப்பதாகவும், 500 மதிப்பெண்களுக்கு தனுஷ் மகன் லிங்கா 460 மதிப்பெண் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ள இந்த சூழ்நிலையில், பெற்றோரின் பிரிவு குறித்த வருத்தத்தில் இருந்தாலும், லிங்கா இவ்வளவு மார்க் எடுத்திருக்கிறார் என்று பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த தகவல் உண்மையான தகவல் தானா என்பது உறுதியாகவில்லை.
தீயாக பரவுகிறது
இதுகுறித்த தனுஷ், ஐஸ்வர்யா தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்றாலும், பத்தாம் வகுப்பில் தனுஷ் மகன் எடுத்த மார்க் இதுவா என்று தீயாய் பரவி வருகிறது லிங்காவின் மார்க் லிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.