பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து, நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்து விட்டனர் என்றாலும், தற்போது தான் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது.

இருவரையும் சேர்த்து வைக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு, அவை அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்ற கூறுகிறார்கள்.

பண விஷயத்தில் தனுஷ்

இந்நிலையில் இருவருக்கும் என்னதான் பிரச்சனை என்று பல்வேறு கதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிய கதை ஒன்று இணைய வட்டாரத்தில், பல்வேறு ஊடகவியலாளர்களால் பேசப்பட்டு வருகிறது.

அதுதான் நடிகர் தனுஷ் பண விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கிறார். அதனால் பல கோடி ரூபாய் கடனில் சிக்கி இருக்கிறார் என்பது.

ரஜினிக்கு ரூ 5000 கோடி சொத்து

ரஜினிக்கு 5,000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் இருக்கின்றன. இந்த சொத்தை நிர்வகிக்கும் திறமை நடிகர் தனுஷிடம் இல்லை.

சொத்து ஏலம் போய்விடுமோ?

அவர் வாங்கி வைத்த கடன்களுக்கு நடிகர் ரஜினிகாந்தின் சொத்து ஏலம் போய்விடுமோ, பகடைக்காய் ஆகி விடுமோ என்ற பயத்தில் இருந்திருக்கிறார் ரஜினிகாந்தின் மனைவியும், நடிகர் தனுஷின் மாமியாருமான லதா ரஜினிகாந்த்.

இதையும் படியுங்கள்: பல பெண்களுடன் தொடர்பு.. இனிமே என்ன மரியாதை.. தனுஷ் குறித்து பிரபல தயாரிப்பாளர் விளாசல்..

முரண்பட்ட ஆவணங்கள்

அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் வாங்கி இருப்பதாக கூறக்கூடிய கடன் தொகை ஒன்றாக இருக்கிறது. ஆனால் அவரிடம் உள்ள ஆவணங்கள் அதற்கு நேர்மாறாக உண்மைக்கு முரணாக இருக்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.

மறுபக்கம் நடிகர் தனுஷின் தந்தைக்கும், ரஜினிகாந்திற்கும் ஏற்பட்ட மனக்கசப்பும் இந்த விவாகரத்துக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது என கூறுகிறார்கள்.

மனவேதனையில் கஸ்தூரி ராஜா

தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா, தயாரிப்பாளர் ஒருவரிடம் கடன் பெற்று இருக்கிறார். அந்த கடனை நடிகர் ரஜினிகாந்தின் பெயரைச் சொல்லி பெற்றிருக்கிறார் என கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், கஸ்தூரிராஜா கடன் வாங்கி இருந்தால் அது அவர் பொறுப்பு. அதற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. அதற்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் என, மீடியாவில் பேசியிருந்தார்.

தன்னுடைய சம்பந்தி ரஜினி, இப்படி தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை பற்றி பேசுவது போல பேசியிருக்கிறார் என மனவேதனையில் இருந்திருக்கிறார் கஸ்தூரி ராஜா.

இதையும் படியுங்கள்: உச்ச கிளாமரில் ஜோதிகா.. உடல் எடை குறைச்சது இதுக்குத்தானா.. இளசுகளை இம்சை பண்ணும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

விவாகரத்து வரை வந்துவிட்டது

அன்று முதல் ரஜினிகாந்தின் வீட்டிற்கு செல்வதை தவிர்த்து இருக்கிறது நடிகர் தனுஷின் குடும்பம். இப்படி சின்ன சின்ன பிரச்சனைகள் பெரிதாகி விவாகரத்து வரை கொண்டு வந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version