இதுக்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்.. குடும்பத்தோடு வந்த தனுஷ்..!

சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களது ஐம்பதாவது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படம் ஆகும். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களின் காலகட்டங்களில் 50 ஆவது திரைப்படம் என்பது சாதாரண விஷயம்.

வெகு சில காலங்களிலேயே 50 திரைப்படங்களில் எளிதாக நடிகர்கள் நடித்து விடுவார்கள். ஏனெனில் அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடிகர்கள் நடித்து விடுவதால் 50 திரைப்படம் என்பது சினிமாவிற்கு வந்து ஐந்து ஆண்டுகளிலேயே நடித்து விடக்கூடிய இலக்காக இருக்கும்.

50 வது படம்:

ஆனால் இப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களில்தான் ஒரு நடிகர் நடிக்கிறார் என்பதால் ஐம்பதாவது திரைப்படம் என்பது முக்கியமான படமாக இருக்கிறது. அதே சமயம் ஐம்பதாவதாக வெளியாகும் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பது அதிலும் முக்கிய விஷயமாக இருக்கிறது.

நிறைய பெரிய நடிகர்களுக்கே ஐம்பதாவது திரைப்படங்களும் 100வது திரைப்படங்களும் சொதப்பி இருக்கிறது. இந்த வகையில் தற்சமயம் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

வருகிற 26 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. நடிகர் கார்த்திக்கு கூட சமீபத்தில் அவரது 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் பெரும் தோல்வியை பெற்றுக் கொடுத்தது. ஆனால் விஜய் சேதுபதியை பொருத்தவரை அவருக்கு அவருடைய ஐம்பதாவது திரைப்படமான மகாராஜா வெற்றி படமாக அமைந்தது.

சிறப்பு வழிபாடு:

எனவே ஒரு திரைப்படம் வெற்றி படமாக அமைவது மக்களின் கைகளிலேயே உள்ளது என்கிற நிலை இருக்கிறது. தனுஷை பொருத்தவரை இதற்கு முன்பு நடித்த திரைப்படங்கள் பலவும் ஆவேரேஜான வெற்றியைதான் கொடுத்திருக்கின்றன.

எதுவும் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுக்கவில்லை. எனவே தற்சமயம் நடிக்கும் ராயன் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் தனுஷ். இந்த நிலையில் எந்த திரைப்படத்திற்கும் இல்லாமல் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்திற்காக குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபாடு செய்திருக்கிறார் தனுஷ்.

இதற்காக தேனியில் உள்ள கஸ்தூரி மங்கம்மாள் என்னும் தன்னுடைய குலதெய்வ ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு பிரார்த்தனைகளை செய்திருக்கிறார் தனுஷ். அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்சமயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அதேபோல தனுஷ் நடித்திருக்கும் ராயன் திரைப்படத்தின் டிக்கெட் ஆன்லைனிலேயே அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version