“புரிஞ்சு போச்சு..” – நடிகர் தனுஷுடன் நெருக்கமாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இது என்னடா வம்பா போச்சு என்பது போல இருக்கிறது சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் இருக்கும் புகைப்படத்துடன் வைரலாகும் ஒரு மீம். சமீப காலமாகவே நடிகர் தனுஷ் மீது அப்படி இப்படி என அரசல் புரசலாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

தனுஷ் படத்தில் யாராவது திருமணம் ஆன நடிகை நடித்தால் அவர் விவாகரத்து பெற்று விடுவார் என்று பேச்சை இணையத்தில் நம்மால் பார்க்க முடியும். அப்படி என்னதான் தனுசுக்கும் சில இணையவாசிகளுக்கும் பிரச்சனையோ தெரியவில்லை.

இப்படியான தகவல்களை பரப்பி விடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவற்றை நாம் அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது புதிய மீம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான திரைப்படம் நானே வருவேன்.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபல நடிகை இந்துஜா. இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிகர் வைபவ் தங்கையாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர்.

இதை தொடர்ந்து சில படங்களில் நடித்த இந்துஜா ரவிச்சந்திரனுக்கு ஹீரோயினாக வாய்ப்பு சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கவில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் இவரைப் படித்திருந்தாலும் கூட என்ன காரணம் என்று தெரியவில்லை இவருக்கு ஹீரோயினாகவும் வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கவில்லை.

இந்நிலையில் நானே வருவேன் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் தனுசுடன் நெருக்கமாக நின்று கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் நடிகர் தனுஷின் டீசர்ட்டில் இருக்கும் வாசகத்தைப் பார்த்து ரசிகர்கள் புரிஞ்சு போச்சு என்று மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …