அப்போ அவ்ளோ பேசிட்டு இப்ப சொந்த பையனுக்கே.. சொன்ன சொல் மீறிய தனுஷ்..!

சினிமா அரசியல் என்று இரண்டு துறைகளிலுமே வாரிசு அரசியல் என்பது தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் கூட நடிகர் கமல் வாரிசு அரசியல் போல வாரிசு சி.ஐ.டியா என்று கேட்பதாக ஒரு வசனம் வரும்.

ஆனால் அந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஷங்கரும் சரி நடிகர் கமல்ஹாசனும் சரி தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது அப்பொழுதே பெரிதாக பேசப்பட்ட விஷயமாக இருந்தது.

நடிகர் தனுஷ்

பெரும்பாலும் ஒரு நடிகர் அவரது வாரிசை சினிமாவில் அறிமுகப்படுத்துவது என்பது மக்களுக்கு ஏற்றுக்கொள்ளும் விஷயமாக இருப்பதில்லை. ஏனெனில் திறமை வாய்ந்த எவ்வளவோ பேர் சினிமா வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் பொழுது வாரிசு என்பதால் மட்டுமே வாய்ப்பை பெற்று உள்ளே வந்து விடுகிறார்கள் இந்த வாரிசு நடிகர்கள்.

வந்த பிறகும் கூட அவர்களுக்கு பெரிதாக வரவேற்புகள் சினிமாவில் இருப்பது கிடையாது. ஏனெனில் கொஞ்சம் கொஞ்சமாக நடித்து வரவேற்பை பெற்று வரும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மாதிரியான நடிகர்கள் இந்த வாய்ப்பின் அருமையை தெரிந்து இருக்கின்றனர்.

சொந்த பையனுக்கே

அதனால் அதில் வளர்ச்சியை காண்பதற்காக பெரிய முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனால் வாரிசு நடிகர்களாக வரும் நடிகர்கள் இப்படி இருப்பது கிடையாது. இந்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் அவரது மகனை இயக்குனர் ஆக்கினார்.

ஆனால் அது கூட மக்கள் மத்தியில் அதிருப்தியைதான் ஏற்படுத்தியது அதுவும் லைக்கா மாதிரியான ஒரு நிறுவனம் எடுத்த உடனேயே ஜேசன் சஞ்சய்க்கு வாய்ப்பு கொடுப்பதற்கு முக்கிய காரணம் அவர் விஜய்யின் மகன் என்பதால்தான்.

ஆனால் லைக்கா நிறுவனம் வேறு எந்த இயக்குனராக இருந்தாலும் நாங்கள் இதே போல வாய்ப்பு கொடுத்திருப்போம் திறமையை வைத்துதான் வாய்ப்பு கொடுத்தோம் என்று கூறியது. ஆனால் இதற்கு முன்பு எந்த ஒரு அறிமுக இயக்குனருக்கும் லைக்கா நிறுவனம் வாய்ப்பு கொடுத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சொன்ன சொல் மீறிய தனுஷ்

இந்த நிலையில் தனுஷ் முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்த விஷயம் தனுஷ் மீது அதிக மரியாதை ஏற்படுத்தி இருந்தது. அதாவது எனது மகனை என்னை ஒரு அடையாளமாக வைத்து சினிமாவில் அறிமுகப்படுத்த மாட்டேன் அவனுக்கு ஒரு திறமை இருந்து அதன் மூலமாக அவனால் சினிமாவில் வர முடிந்தால் வரட்டும்.

அப்பொழுதுதான் எனக்கு பெருமை என்று கூறி இருந்தார். ஆனால் தற்சமயம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ். இந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கான வரிகளை தனுஷின் மகன் எழுதி இருக்கிறார்.

முன்பு அவ்வளவு பேசிவிட்டு கடைசியில் தற்சமயம் தன்னுடைய வாரிசு என்பதை பயன்படுத்தி தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் படத்திலேயே தனுஷ் தன் மகனை அறிமுகப்படுத்துகிறாரே என்று இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version