தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், கலைஞர் 100 விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். மேலும் தன் மனைவியை விவாகரத்து செய்ததை அடுத்து இவர் தனது முன்னாள் மாமனாரான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருக்கக்கூடிய நிகழ்வு நடந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திரைப்பட துறையைச் சார்ந்தவர்களும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து கலைஞர் 100 என்ற பெயரிட்டு கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சீரும் சிறப்புமாக கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வில் திரை உலகைச் சார்ந்த பல ஜாம்பவான்கள் கலந்து கொண்டார்கள். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், சிவகார்த்தியன், தனுஷ், சூர்யா, கார்த்தி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாக்ஷி அகர்வால், பார்த்திபன், வடிவேலு, வெற்றிமாறன், பா ரஞ்சித், ஷங்கர் போன்றோர் இடம் பெற்று இருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றி, கலைஞர் அரசியல் மற்றும் சினிமாவில் செய்த சாதனைகளை குறித்து பேசினார். மேலும் தனுஷ் கலைஞர் பற்றி பேசும் போது கலைஞர் தன்னை மன்மத ராசா என்று சொல்லி அழைத்ததாக கூறியதோடு அவரைப் பற்றி பேச தனக்கு அனுபவமோ, வயது இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் அரங்கத்தில் இருந்தவர்களுக்கு வணக்கம் சொன்ன தனுஷ் ரஜினியை சூப்பர் ஸ்டார் அவர்களுக்கும் எனக் குறிப்பிட்டது அரங்கில் மிகப்பெரிய கர ஒலியை ஏற்படுத்தியது. தனுஷ் ரஜினியின் மகளாகிய ஐஸ்வர்யாவை பிரிந்து மூன்று ஆண்டுகள் கழிந்த பின் ரஜினியோடு கலந்து கொள்ளும் முதல் நிகழ்வு இது என கூறலாம்.
ரஜினி நடித்த எந்திரன் படம் பார்க்க கலைஞர் கருணாநிதி வந்திருந்த நினைவுகளையும் அசை போட்ட தனுஷின் பேச்சை ரஜினி ரசித்து கேட்டார். அத்தோடு விவாகரத்து ஆன பிறகு தனுசுடன், ரஜினியும் எந்தவிதமான பேச்சும் வைத்துக்கொள்ளவில்லை என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகிறது.
எனினும் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போயஸ் கார்டனில் தனுஷ் வீடு கட்டும் பூமி பூஜையில் ரஜினி கலந்து கொண்டார். இதனை அடுத்து இந்த நிகழ்வில் தான் இவர்கள் இணைந்து இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வு பற்றி தான் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தற்போது பேசி வருகிறார்கள். இவர்கள் இருவரும் பேசிய பேச்சானது தற்போது இணையத்தில் அதிகளவு விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.