சரத்குமார் செய்த சேட்டை.. வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷின் தாய்..! பரபரப்பு தகவல்கள்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் நடிகர் சரத்குமார் ஆரம்ப நாட்களில் திரை படங்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து அதன் பிறகு வில்லனாக பல படங்களில் நடித்ததை அடுத்த தான் ஹீரோவாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பன்முக திறமையை கொண்டிருக்கக்கூடிய நடிகர் சரத்குமார் ஹோலிவூட்டில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக விளங்குவதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் அளப்பரிய பணிகளை செய்து வருகிறார்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்..

சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் சரத்குமார் பற்றி அதிக அளவு பகிர வேண்டாம். இவருக்கு என்று ஒரு ரசிகப் படை இன்றளவும் உள்ளது.

இவரது சிறந்த நடிப்பை சூரியவம்சம் திரைப்படத்தில் நீங்கள் பார்த்து தெரிந்து இருக்கலாம். அதோடு அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தீவிர பிரச்சாரம் செய்ததும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

மனைவிக்காக கணவர் என்ன செய்கிறார் என்ற கேள்விகளை எழுப்பி வரக்கூடிய காலகட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தன் மனைவி ராதிகா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கோவிலில் அங்க பிரதட்சணம் செய்து அனைவரையும் அசர வைத்தார்.

வீட்டுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கும் மிகச் சிறப்பான வழிமுறைகளை எடுத்துச் சொல்லக்கூடிய நடிகர் சரத்குமாரின் மூத்த மனைவியின் மகள் நடிகை வரலட்சுமியின் திருமணம் விரைவில் நடைபெறக் கூடிய சூழ்நிலையில் புதிதாக சிக்கல் ஒன்று அவருக்கு முளைத்துள்ளது.

சரத் செய்த சேட்டை..

இந்த சிக்கலில் இருந்து எப்படி வெளி வர இருக்கிறார் என்பது இனி வரக்கூடிய நாட்களில் தான் தெரிய வரும். அப்படி என்ன மாதிரியான சிக்கலில் அவர் சிக்கி இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அந்த சிக்கல் பற்றிய விரிவான தகவல்களை நீங்கள் இப்போது படிக்க தெரிந்து கொள்ளலாம். நடிகர் சரத்குமாருக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்டில் தரைத்தளத்தில் வீடு உள்ளது.

அதே அப்பார்ட்மெண்டில் இருக்கும் இன்னொரு வீட்டில் தான் நடிகர் தனுஷின் பெற்றோர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தான் சிக்கல் உள்ளது. அது என்னவென்றால் அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சொந்தமான மாடிப்பகுதியை சரத்குமார் ஆக்கிரமிப்பு செய்து வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறார்.

இதனை அடுத்து அவர் சட்டத்திற்கு புறம்பாக அந்த பகுதிகளை ஆக்கிரமித்து வணிக ரீதியாக பயன்படுத்துவது குறித்து குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளது.

வழக்குத் தொடர்ந்த நடிகர் தனுஷின் தாய்..

இதனை அடுத்து அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் முன்னணி தமிழ் நடிகர் தனுஷின் அம்மா உள்ளிட்ட பலரும் நீதிமன்றத்தில் இது நிமித்தமாக வழக்கு ஒன்றை தொடர்ந்து இருக்கிறார்கள்.

எனவே இந்த வழக்கு குறித்து சரத்குமார் சென்னை மாநகராட்சிக்கு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் தற்போது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

எனவே இது குறித்து விரிவான தகவலை நடிகர் சரத்குமார் வழங்கினால் மட்டும் தான் இந்த விஷயம் பற்றிய உண்மை நிலை என்ன என்பது தெரிய வரும் என  அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் நடிகர் தனுஷின் பெற்றோர்கள் சரத்குமார் மீது வழக்கு தொடர்ந்திருப்பது ட்ரெண்டிங் ஆகி இணையத்தில் அதிக அளவு பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இந்த விஷயத்தை புரிந்து கொண்ட ரசிகர்கள் பொதுமக்கள் ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? தனக்கு இல்லையா? என்ற ரீதியில் கலவை ரீதியான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version