தனுஷ் பட நடிகை ரஜிஷா விஜயன் திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த வளர்ந்தவரான நடிகை ரஜிஷா விஜயன்
மலையாள திரைப்படங்களில் நடித்துஅங்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

நேச்சுரலான அழகில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மலையாள சினிமா ரசிகர்களின் மனம் கவந்த நடிகையாக ரஜிஷா விஜயன் மிகக்குறுகிய காலத்திலேயே பெரும் புகழ்பெற்றார்.

யதார்த்தமான நடிகையாக ரஜிஷா விஜயன்:

இதை அடுத்து அவருக்கு தமிழ் மொழியில் வாய்ப்புகள் கிடைக்க இங்கும் நடிகையாக அறிமுகமாக இருந்தார்.

முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “அனுராகா கரிக்கின் வெள்ளம்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகி இருந்தார் .

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்பட்டதால் இவர் இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது வென்றார்.

பிரபலமான நடிகையாக முதல் படத்திலே பார்க்கப்பட்டார் ரஜிஷா விஜயன். நடிகையாவதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தான் தனது பணியை துவங்கி இருந்தார்.

அதன் பிறகு தான் அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை கிடைத்தது. வாய்ப்பு கிடைத்த போதே அது சரியாக பயன்படுத்திக் கொண்டு முதல் படத்திலே எல்லோரது கவனத்தை ஈர்த்தார்.

தொடர்ச்சியாக மலையாளத்தில் வெளிவந்த சினிமாக்காரன், ஜூன், பைனான்ஸ் ,ஸ்டான்ட் அப் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டார்..

தொகுப்பாளினியாக ரஜிஷா விஜயன்:

பிரபலமான தொலைக்காட்சியாக பார்க்கப்படும் சூர்யா தொலைக்காட்சியில் விது பிரதாப்புடன் சேர்ந்து சூர்யாவின் சேலஞ்ச் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகி இருந்தார்.

தொடர்ந்து மலையாள சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அந்த நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்த ரஜிஷா விஜயனுக்கு தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் தேடி சென்றது.

அதன்படி சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான ஜெய் பீம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அறிமுகமாகி இருந்தார்.

இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதை அடுத்து தனுஷ் உடன் சேர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார் .

கர்ணன் படம் கொடுத்து புகழ் :

இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியும் புகழும் தேடி தந்தது. இப்படியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் அடுத்தடுத்து நடித்து ஈர்த்தார்.

நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடிப்பதற்குள்ளே திடீரென காதல்…. திருமணம் என தனிப்பட்ட வாழ்க்கையில் தனது ஈடுபாட்டை செலுத்தி விட்டார்.

அதன்படி அவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஆன டோபின் தாமஸை காதலித்து வருகிறார். அவருடன் எடுத்துக் கொண்ட பல நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தாங்கள் காதலிப்பதை உறுதிப்படுத்தினார்கள் .

பிரபலத்துடன் காதல் திருமணம்:

மேலும், இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதைப்போல ஒளிப்பதிவாளர் தோப்பின் தாமஸும் ரஜிஷா விஜயன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை வெளியிட்டு காதலை வெளிப்படுத்தியிருந்தார்.

இருவரும் ரகசியமாக சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

இப்படி ஆன நேரத்தில் டோபின் தாமஸ் தனது சமூக வலைதளத்தில் நடிகை ரஜிஷா விஜயனுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “1461 நாட்கள்” என கேப்ஷன் கொடுத்து சூரியனைச் சுற்றி மற்றொரு பயணத்தை நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். அந்த பதிவில், ‘முடிவற்ற காதலை நோக்கி’ என நடிகை ரஜிஷா கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version