நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார். அடுத்து அவர் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில், இளையராஜா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் நடிக்க தனுஷின் சம்பளம் ரூ. 50 கோடி என பேசப்பட்டுள்ளது.
இப்போதைய தமிழ் சினிமாவில் 100 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினிகாந்த் ( 120 கோடி ரூபாய்) கமல்ஹாசன் ( 150 கோடி ரூபாய்) நடிகர் விஜய் ( 200 கோடி ரூபாய்) நடிகர் அஜீத்குமார் ( 163 கோடி ரூபாய்) என்று வாங்கி வரும் நிலையில், அடுத்த லெவல் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவராக தனுஷ் இருக்கிறார்.
தனுஷ்
இப்போது தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தையும், தனது அக்கா மகன் நடிக்கும் படமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இதுதவிர இப்போது தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில், குபேரா என்ற படத்திலும் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங், ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
பான் இந்தியா படங்களாக
தமிழ் சினிமாவை பொருத்தவரை பான் இந்தியா படங்களாக தருவதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழில் எடுத்த படத்தை இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிறமொழிகளில் டப்பிங் செய்வதுதான் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது. மற்றபடி அந்த படங்களை ரீமேக் கூட செய்வது இல்லை.
இதையும் படியுங்கள்: அடியாத்தி.. வெறும் ஸ்கர்ட் மட்டும் தான்.. டாப்ஸ் பளிச்சுன்னு தெரிய.. சாந்தினி தமிழரசன் நச் போஸ்..!
இப்படி பான் இந்தியா படமாக உருவாக்க வேண்டும் என்றால் அதில் தமிழ் நடிகர்கள் மட்டும் நடித்தால் போதாது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அந்தந்த படவுலகில் டாப் ஸ்டாராக உள்ள நடிகர்ளும் இதில் முகம் காட்டினால் அந்த மொழி ரசிகர்களும் படம் பார்க்க வருவார்கள்.
நான்கு மடங்கு சம்பளம்
இந்த கோணத்தில்தான், பிறமொழி கலைஞர்கள் தமிழ் படங்களில் நடிக்க வைக்கப்படுகின்றனர். ஆனால் சில காட்சிகளில் வந்தாலும், நான்கு மடங்கு சம்பளம் பல கோடிகளில் அவர்களுக்கு வாரி வழங்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. இப்படியொரு இடுப்பா.. யாரும்மா நீயி.. ரித்திகாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..
குபேரா
இப்போது தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தை, இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர்களில் முன்னணி ஹீரோ நடிகர்களில் ஒருவரான நாகர்ஜூனா நடிக்கிறார். இவர் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் தோழா படத்தில், கார்த்திக்கு முதலாளியாக நடித்திருப்பார்.
வில்லன் கேரக்டரில்…
இந்த படத்தில் நாகார்ஜூனா வில்லன் கேரக்டரில் நடித்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பிச்சைக்காரன் கெட்டப்பில் இருக்கும் தனுஷ், பெரிய அரசியல் தலைவராக மாறுவதுதான் குபேரா படத்தின் கதை என்றும் தெரிய வந்துள்ளது.
தனுஷ் வில்லனாகும் முன்னணி ஹீரோ நாகார்ஜூனா நடிப்பதுதான் குபேரா படத்தின் அப்டேட் ஆக உள்ளது. இது வேற லெவல் ட்விஸ்ட்டு என தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.