திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களின் வரிசையில் மிகவும் குறுகிய காலத்திலேயே பெயர் பெற்ற நடிகர் என்றால் அது நடிகர் தனுஷ் தான். துள்ளுவதோ இளமை படத்தில் தன் துடிப்பான நடிப்பை காட்டி இளைஞர்களை கிறங்கடித்தார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல நாட்களாக இவர்களுடைய இல்லறம் மிகவும் சிறப்பாக சென்று கொண்டு வந்த வேளையில் இடையில் பூகம்பம் ஏற்பட்டு இரண்டு மகன்கள் இருக்கக் கூடிய சூழ்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.
உங்கள் எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரியும் திரை உலகில் இருக்கும் அத்தனை நடிகர்களும் தங்களுடைய அடைமொழிக்காக காத்திருப்பார்கள்.
இப்படி வைத்துக்கொள்ள வேண்டும், அப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் எப்போதும் இருக்கும்.
உதாரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன், இளைய தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என பல முன்னணி நடிகர்களும் இந்த அடைமொழியோடு தான் உலா வருகிறார்கள். ஆனால் தனக்கு எந்த ஒரு அடைமொழியும் வேண்டாம் என்ற ஒரு கொள்கை பிடிப்போடு இருக்கிறார் தனுஷ்.
மேலும் ரசிகர்கள் மன்றம் சார்பில் பல்வேறு வேண்டுகோளை இது நிமித்தமாக வைத்த போதும் அவர் அசராமல் நிலைப்பாட்டில் அப்படியேதான் இருக்கிறாரே ஒழிய அதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வதாக தெரியவில்லை.
இதனை அடுத்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரை இளம் சூப்பர் ஸ்டார் என்று சிலர் அழைத்தபோது கையெடுத்து கும்பிட்டு என்னை விட்டு விடுங்கள் எனக்கு அடைமொழியை வேண்டாம் என்று மறுத்தது வைரலாக ஆகிவிட்டது.
இவரைப் போலவே நடிகர் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், அதர்வா, ஜெய் உட்பட்ட பல நடிகர்களும் இது போன்ற அடை மொழிகள் தங்களுக்கு வேண்டாம் என்று கொள்கை ரீதியாக உள்ளார்கள் என்று கூறலாம்.