மீண்டும் தனுஷை சீண்டிய சிவகார்த்திகேயன்.. விளாசும் ரசிகர்கள்..! என்ன இருந்தாலும் நியாயம் வேணாமா..?

தமிழ் திரை படத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் நட்பு பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

இன்று தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயன் எந்த அளவு தன்னுடைய உழைப்பால் முன்னேறி இருந்தாலும் அவரை திரை உலகிக்கு அழைத்து வந்தவர் தனுஷ் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.

எனினும் கடந்த காலத்தை மறந்து விட்டு தற்போது சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் பேச்சானது மீண்டும் தனுஷை சிவகார்த்திகேயன் சீண்டி இருப்பதாக ரசிகர்களின் மத்தியில் பெருத்த அளவு எதிர்மறை பேச்சுக்கள் அதிகரித்து இருப்பதோடு சிவகார்த்திகேயனை ரசிகர்கள் அனைவரும் விளாசி வருகிறார்கள்.

மீண்டும் தனுஷை சீண்டிய சிவகார்த்திகேயன்..

நடிகர் தனுஷ் தற்போது தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தில் நடித்து இயக்கியதை அடுத்து இந்த படம் அண்மையில் திரையரங்குகளில் வெளி வந்து வசூல் ரீதியாக மிகச் சிறப்பான வெற்றியை தனுஷுக்கு பெற்று தந்துள்ளது.

இந்தப் படமானது சுமார் 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ள நிலையில் மிகுந்த மகிழ்ச்சிகள் இருக்கும். தனுஷ் அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்தப் படத்தை அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சிகள் இருக்கிறார்கள். மேலும் குபேரா, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய இரண்டு படங்களை முடித்துவிட்டு தனுஷ் இளையராஜாவின் பயோபிக் படப்பிடிப்பில் இணைவார்.

இந்நிலையில் ராயன் பட வெற்றியில் இருக்கும் தனுஷை சிவகார்த்திகேயன் பேச்சு உச்சகட்ட அப்சட்டில் கொண்டு போய் விட்டு விட்டது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நான் யாரையும் கண்டுபிடித்து வாய்ப்பை கொடுத்து வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்ல மாட்டேன். என்னைத்தான் அப்படி சொல்லி பழகி விட்டார்கள் என்று பேசி இருந்தார்.

விளாசும் ரசிகர்கள்..

இந்தப் பேச்சானது நடிகர் தனுஷை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் பலரும் விளாசி தள்ளி இருக்கிறார்கள். இதற்கு காரணம் ஆரம்பகட்டத்தில் சினிமாவிற்குள் நுழைய தனுஷ் தன்னுடைய மூன்று திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்ததை அடுத்த தான் அவர் ஹீரோவாக எதிர்நீச்சல் படத்தில் நடித்திருந்தார்.

 

இந்நிலையில் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு தனுஷ் தான் காரணம் என்று திரையுலகில் பலரும் பேசி வந்தார்கள். அதைத்தான் சிவகார்த்திகேயன் தற்போது சுட்டிக்காட்டி பேசி இருப்பதாக கூறி இருப்பதோடு இதனால் தனுஷ் ரசிகர்கள் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே தனுஷ் வெளியிட்ட பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் பரவலாக வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

என்ன இருந்தாலும் நியாயம் வேணாமா..

இதற்குக் காரணம் இந்த பேட்டியில் தனுஷ் தான் யார் நன்றியையும் எதிர்பார்த்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எனக்கு அவர்களின் நன்றியும் தேவையில்லை என்று கூறி இருந்தார். இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் ஷேர் செய்து சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இனியும் சிவகார்த்திகேயன் யாரை குறிப்பிட்டு இவ்வாறு பேசினார் என்பதற்கு தெளிவான விளக்கம் ஏதும் இல்லாத நிலையில் தற்போது இந்த விஷயமானது இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version