இது தெரிஞ்சிருந்தா போயஸ் கார்டனில் நான் வீடே வாங்கியிருக்க மாட்டேன்.. தனுஷ் அதிரடி..!

தமிழ் திரைகளுக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழக்கூடிய நடிகர் தனுஷ் தமிழில் அண்மையில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய அளவு வெற்றியை இவருக்கு தராமல் கலவை ரீதியான விமர்சனத்தை தான் பெற்று தந்தது.

மேலும் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்து பெற்று இருக்கிறார்.

அத்துடன் இவர் பாடகி சுசித்ரா சுமத்திய குற்றச்சாட்டுகள், டைவர்ஸ், போயஸ் கார்டனில் வீடு போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி தரக்கூடிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

நடிகர் தனுஷ்..

நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனின் திரைப்படமான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் தொலைக்காட்சி அறிமுக நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது தவிர்க்க முடியாத தமிழ் நடிகராக உச்சம் தொட்டிருக்கிறார்.

மேலும் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ், துஷ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி பல முக்கிய நடிகை நடிகர்கள் நடிக்க இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க தனுஷ் இயக்கி இருக்கிறார்.மேலும் இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்திருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் ஆரம்ப காலத்தில் தனது கடுமையான முயற்சியினால் இந்த அளவு வளர்ந்து இருக்கிறார். இவர் தற்போது பாலிவுட், கோலிவுட் என அனைத்து துறைகளிலும் தனக்கு என்று தனி முத்திரையை பதித்திருக்கிறார்.

இந்நிலையில் பாடகி சுசித்ரா நடிகர் தனுஷின் அவரது முன்னாள் கணவர் கார்த்திகேயன் இணைத்து வைத்து பேசி சர்ச்சைகளை கிளப்பிவிட்ட நிலையில் தற்போது ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது வரை இது வரை மௌனம் காத்த தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் அந்தப் பேச்சுக்களுக்கும் சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இது தெரிஞ்சிருந்தா..

நடிகர் தனுஷ் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் போதே உருவ கேலிக்கு உள்ளானவர். அதிலிருந்து மீண்டு வந்து எந்த அளவு இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடுமையான உழைப்பு தான் காரணம். மேலும் தன்னை பற்றி அவதூறாக பேசிய பாடகி சுசித்ராவிற்கு பதிலடிக்கும் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் தன்னை பற்றி தனக்கும் தன்னை பெற்றவர்களுக்கும், தனது பிள்ளைகளுக்கும், ரசிகர்களுக்கும் மிக நன்றாக தெரியும் என சொல்லி பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்தார்.

அத்தோடு திரைத்துறைக்கு வந்த புதிதில் ஒன்றுமே தெரியாமல் இருந்த தன்னை ஆளாக்கியதில் தனது அண்ணன் செல்வராகவன் என்றும் அவர்தான் தன்னுடைய குரு என்றும் தனக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுத்தது முதல் சாப்பிட சொல்லி தந்து வாழ்க்கையில் போராட கற்றுக் கொடுத்ததும் தனது அண்ணன் தான் என்று சொல்லி இருக்கிறார்.

போயஸ் கார்டனில் வீடு வாங்கியிருக்க மாட்டேன்..

அதுமட்டுமல்லாமல் குடிசையில் இருந்த தன்னை போயஸ் கார்டனில் உட்கார வைத்திருப்பதும் அவர்கள் தான். ஆரம்ப காலத்தில் செல்வராகவன் படப்பிடிப்பில் இரண்டாவது டேக் என்றால் கோபப்படுவேன்.

ஆனால் அவர் என்னை எவ்வளவு டார்ச்சர் செய்து வேலை வாங்கி இருக்கிறார். அதே டார்ச்சர் அவருக்கு கொடுத்து அதில் அவர் கஷ்டப்படுவது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

மேலும் போயஸ் கார்டனில் நான் வீடு கட்டியிருப்பது இவ்வளவு பேச்சுக்களை கிளப்பும் என்று தெரிந்திருந்தால் நான் அங்கு வீடு கட்டி இருக்கவே மாட்டேன். நான் யார் என ரசிகர்களான உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

அதுமட்டுமல்லாமல் ரஜினி சார் வீடு போயஸ் கார்டனில் இருக்கிறது. 16 வயதில் ரஜினி சாரின் வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அங்கு இருந்த போலீசாரிடம் கெஞ்சி அவர் வீட்டை பார்த்தேன்.

அதன் அருகிலேயே தான் ஜெயலலிதா அம்மாவின் வீடு இருந்தது. எனவே தான் போயஸ் காரனில் ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என்ற கனவு எனக்குள் அப்போது விதையாக விழுந்தது.

அந்த கனவு தற்போது நிஜமாகிவிட்டது நான் யார் என்பது அந்த சிவனுக்கு தெரியும். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும் என சூசகமாக தனுஷ் பேசியிருப்பது தற்போது இணையத்தில் பரவலாக வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version