வடசென்னை படத்தில் நானும் சிம்புவும் நடிக்க வேண்டியது.. நடக்காமல் போக இருதான் காரணம்..! தனுஷ் ஓப்பன் டாக்..!

தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்திலும் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் தனுஷ் மற்றும் சிம்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவர்கள் இருவரும் மிக திறமையான நடிகர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் இவர்களுக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வடசென்னை படத்தில் நானும் சிம்புவும்..

அண்மையில் வெளி வந்த வடசென்னை படத்தைப் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் தனுஷ் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் வடசென்னை படத்தில் சிம்புவோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் தன்னிடம் கேட்டதாக அவர் கூறியிருக்கிறார்.

பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் தனது இரண்டாவது படத்தில் தனுஷை ஹீரோவாக வைத்து ஆடுகளப் படத்தை இயக்கி தேசிய விருதை பெற்றவர்.

இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த படங்கள் என்றாலே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் ஏற்பட்டது.

அந்த வகையில் ஆடுகளம் படத்தை தொடர்ந்து விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீண்டும் தனுஷோடு இணைந்து வடசென்னை படத்தை இயக்க வேண்டும் என நினைத்தார்.

இந்நிலையில் தனுஷ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் என்னிடம் வடசென்னை படத்தின் கதையை சொன்ன போது எனக்கு பிடித்து விட்டது.

அப்போது அதில் இருக்கும் மற்றொரு கதாபாத்திரத்தை சிம்புவையும், ராஜா என்ற கதாபாத்திரத்தில் என்னையும் நடிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

நடக்காமல் போக காரணம்..

என்னிடம் அந்த அளவிற்கு பெருந்தன்மை இல்லை எனவே நான் அந்த கேரக்டரை பண்ணவில்லை என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தான் ராஜா கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடித்தார் என்று பேட்டியில் பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் வடசென்னை படத்தில் நடித்தது குறித்து அமீர் பேசும் போது தனுஷ் தன்னிடம் போன் செய்து வடசென்னை படத்தில் நடிக்குமாறு வற்புறுத்தி கேட்டுக் கொண்டதை அடுத்து நான் அந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.

எனினும் முதலில் படத்தின் கதையை கேட்டு அது வெற்றி பெறுமா என்ற நம்பிக்கை இல்லாததை அடுத்து கதை மேல் நம்பிக்கை இல்லை என்று கூறினேன். ஆனால் தனுஷ் தான் அண்ணா நீங்க எனக்காக இந்த படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.

தனுஷ் ஓப்பன் டாக்..

தனுஷ் இவ்வளவு தூரம் தன்னிடம் வற்புறுத்தி கூறியதை அடுத்த தான் வடசென்னை படத்தில் நடித்தேன். ஆனால் வடசென்னை படத்திற்கு பிறகு 40 கதைகள் என்னை தேடி வந்ததே என்று இயக்குனர் அமீர் கூறி இருந்தார்.

இதனை அடுத்து வடசென்னை படத்தில் தனுஷ் நடிக்காமல் போனதற்கான காரணத்தை தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் இணைந்து நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version