இதை நல்லாவே ஐஸ்வர்யா புரிந்து வைத்துள்ளார்.. முதன் முறையாக வாய் திறந்த தனுஷ்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றதை அடுத்து தற்போது சேகர் கம்முல்லா இயக்கம் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ்..

அத்தோடு இவர் தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார். அத்தோடு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கக் கூடிய சூழ்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி உள்ளது.

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான தனுஷ் ஆரம்பத்தில் இவரது உடல் அமைப்பினை பார்த்து பலரும் கேலி செய்ய அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இன்று தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கிறார்.

இது வரை 49-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட் படங்களாக இருந்ததை அடுத்து தனுசுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

நல்லாவே ஐஸ்வர்யா புரிந்து..

இந்நிலையில் பல படங்களில் தன் திறமையை வெளிப்படுத்திய இவர் தன்னை கிண்டல் செய்தவர்களை வியக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது பாராட்டுகளையும் பெற்றவர்.

நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பன்முகத் திறமையை கொண்டிருக்கும் தனுஷ் பவர் பாண்டி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இந்நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டு இருபது ஆண்டுகளுக்கு மேலாக மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்கள் இரண்டு மகன் உள்ள சூழ்நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

முதன்முறையாக வாய் திறந்த தனுஷ்..

இதனை அடுத்து இவர்கள் மீண்டும் இணைந்து வாழ மாட்டார்களா? என்று இரு குடும்பத்தாரும் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து பார்த்தும் ஐஸ்வர்யாவின் விட்டுக் கொடுக்காத தன்மையால் இன்று விவாகரத்து வரை சென்றிருக்கிறார்கள்.

மேலும் இவர்களது விவாகரத்துக்கு பல்வேறு வகையான காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்தும் திருமண வாழ்க்கை குறித்தும் தனுஷ் பேசியிருந்த பழைய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவிட்டது.

அந்த பேட்டியில் தனுஷ் பேசும் போது திருமணத்திற்கு முன்பு நான் எப்படி இருந்தேனோ அப்படியே தான் திருமணத்திற்கு பிறகும் இருக்கிறேன்.

என்னிடம் எந்த விதமான மாற்றமும் இல்லை எனது மனைவி ஐஸ்வர்யா என்னை நன்றாக புரிந்து கொண்டு நடந்து கொள்வார் என்று நினைக்கிறேன் என்று கூறிய விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக வலம் வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version