கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியான தனுஷின் படம் கேப்டன் மில்லர். வாத்தி படத்துக்கு பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படத்தை ஆக்‌ஷன் படமாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தந்திருக்கிறார். படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதா உள்ளிட்ட இந்த படமும் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த ஒரு படமாகதான் வெளிவந்து இருக்கிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் முதலில் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஒரே பாகம்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் மூன்று மணி நேரத்துக்கு மேல் படத்தின் நீளம் குறைக்கப்பட்டதாகவும், இந்த படம் பெரிய வெற்றி என்றால், மீதி காட்சிகளை வைத்து 2ம் பாகம் வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கேப்டன் மில்லர் வெளியாவதற்கு முன்பே படம் குறித்த சில விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஏனெனில் படத்துக்கு முதலில் ஏ சான்றிதழ் தரும்படியாக அதிக வன்முறை இருந்துள்ளது. க்ளைமாக்சில் பல காட்சிகளை வெட்டிய பிறகே, படத்துக்கு யுஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 14 காட்சிகள் படத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷ் பெற்ற சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக ரூ. 12கோடி சம்பளம் பெற்ற நிலையில், கேப்டன் மில்லர் படத்துக்கு ரூ. 15 கோடி சம்பளம் பெற்றதாக தெரிய வந்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam