தனுஷ் இரண்டாம் திருமணம்..! மணப்பெண் இவங்களா..? வெளியான பரபரப்பு தகவல்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

முதல் படத்தில் வெற்றியைத் தந்த இவரைப் பற்றி ரசிகர்கள் பலரும் உருவ கேலி செய்வதை அடுத்து அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது நடிப்பில் கவனத்தை செலுத்தி இன்று அசைக்க முடியாத ஹீரோக்களின் வரிசையில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து விட்டார்.

நடிகர் தனுஷ்..

அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றிருந்தது.

மேலும் தனுஷ் 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கக்கூடிய நிலையில் கருத்து வேற்றுமை காரணமாக பிரிந்து விட்டார்கள்.

இதனை அடுத்து சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஐஸ்வர்யா தனுஷை விட்டு நிரந்தரமாக பிரிய முடிவெடுத்ததை அடுத்து இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருப்பதாக செய்திகள் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பரவியது.

இரண்டாவது திருமணமா..

இதனை அடுத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களும் இவர்கள் குழந்தைகளுக்காவது சேர்ந்து வாழ வேண்டும் என்று பல்வேறு விதமான பதிவுகளை செய்து வந்த வேளையில் இரு வீட்டாரின் முயற்சி வெற்றி அடையாமல் இறுதியாக விவாகரத்தை நோக்கி சென்று விட்டது.

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தனுஷின் இரண்டாவது திருமணம் குறித்து பேசிய பேச்சானது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி தற்போது பலராலும் பேசப்படுகின்ற பேசும் பொருள் ஆகிவிட்டது.

இதற்கு காரணம் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவர்கள் வீட்டில் முடிவெடுத்து பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

மணப்பெண் இவங்களா பரபரப்பு தகவல்..

அந்த வகையில் தனுஷின் அப்பா கஸ்தூரிராஜா சொந்த பந்தத்தில் இருந்து ஒரு பெண்ணை பார்த்து தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகிறார்.

மேலும் சினிமாவைச் சார்ந்து பெண் இருந்தால் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் சொந்தத்தில் இருக்கும் பெண்ணை பார்த்து திருமணம் செய்வது மேல் என்று நினைத்து இருக்கிறார்கள்.

எனவே விவாகரத்து கிடைத்த கையோடு தனுசுக்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் கூறிய விஷயம் தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

அத்தோடு இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தனுஷின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஐஸ்வர்யாவின் நலம் விரும்பிகள் பலரும் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா? என்று கேட்டு வருகிறார்கள்.

எனினும் சமரசத்தை விரும்பாத ஐஸ்வர்யா இணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லாத காரணத்தால் விவாகரத்து பெறுவது உறுதியாகிவிட்டது.

இதனை அடுத்து இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன் என்ற பாடல் வரிகளை ரசிகர்கள் சொல்லி அவர்களுக்குள் அந்த அதிர்ஷ்டசாலியான பெண் யார் என்ற பேச்சைப் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version