19 வருஷ கல்யாண வாழ்க்கை.. டெய்லி சண்டை.. தனுஷின் அக்கா உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் தனுஷ். பொதுவாக தமிழ் சினிமாவில் சம்பள அடிப்படையில்தான் நடிகர்களின் ரேங்கிங் என்பது நிர்ணயிக்கப்படும்.

அந்த வகையில் தனுஷ் குறைவான சம்பளம் வாங்கும் ஒரு நடிகராகதான் இருந்து வருகிறார் என்றாலும் நடிப்பு ரீதியாக கமலுக்கு அடுத்து தனுஷ்தான் என்று கூறும் அளவிற்கு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவராக தனுஷ் இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் காதல் கொண்டேன் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற திரைப்படங்களில் நடித்த தனுஷின் நடிப்பிற்கும் இப்பொழுது அவருடைய நடிப்பிற்கும் இடையே வேறுபாட்டை பார்த்தாலே நடிப்பில் அவர் அப்டேட் ஆகி இருப்பது பலருக்கும் தெரியும்.

தனுஷிற்கு வந்த ரசிகர்கள்:

அதுதான் தனுஷிற்கு அதிகமான ரசிகர்களையும் உருவாக்கி இருக்கிறது. தொடர்ந்து கமர்சியல் நடிகர்கள் தேர்ந்தெடுக்க தயங்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் தனுஷும் விஜய் சேதுபதியும்தான் இப்போதைய நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

அதே சமயம் தனுஷ் தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹாலிவுட் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது தனுஷின் ஆசையாக இருக்கிறது.

அதேபோல ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படமாகி அதில் நடிக்க வேண்டும் என்பதையும் தனுஷ் தனது ஆசையாக கொண்டிருக்கிறார். சினிமாவை விட்டு செல்வதற்கு முன்பே இந்த இரண்டு ஆசைகளும் நிறைவேற வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்து வருகிறது.

சகோதரி போட்ட பதிவு:

இதற்கு நடுவே தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மகளுக்கு இடையே ஏற்பட்ட விவாகரத்து குறித்து அதிக சர்ச்சைகள் போய்க்கொண்டிருந்தன. இந்த நிலையில் தனுஷின் அக்கா கார்த்திகா சமீப காலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

தனுஷின் அக்காவான கார்த்திகா பிரபலமான மகப்பேறு மருத்துவராக இருந்து வருகிறார். இவரது மருத்துவ படிப்புக்கு கேப்டன் விஜயகாந்த்தான் செலவு செய்தார் என்பது முன்பே பலரும் அறிந்த விஷயமாகும். இவர் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் கார்த்திகா. இவருக்கு திருமணம் ஆகி 19 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன. தற்சமயம் 19 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் கார்த்திகா.

அதில் திருமணம் ஆகி 19 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் நாங்கள் காதலிக்க துவங்கி 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நமக்குள் நிறைய சண்டைகள் உருவாகி இருக்கின்றன. ஆனால் சண்டைகள்தான் நம்மை ஒன்றிணைகின்றன என்று நினைக்கிறேன் என்று கூறி கார்த்திகா ஒரு பதிவை போட்டிருந்தார் தற்போது அதுதான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version