உருவ கேலி முதல்.. சுச்சி லீக்ஸ் வரை.. ராயன் ஆடியோ லாஞ்சில் வெளுத்த உண்மை..! சர்ச்சைகளுக்கு தனுஷ் முற்றுப்புள்ளி..!

தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வரும் நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் தனுஷ்.

அதே திரைப்படத்தில்தான் செல்வராகவனும் இயக்குனராக அறிமுகமானார். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டங்களில் தனுஷிற்கு நடிப்பு என்பது அவ்வளவாக வரவில்லை. தொடர்ந்து அவருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தது அவரது அண்ணன் செல்வராகவன்தான்.

காதல் கொண்டேன் படம்:

தொடர்ந்து காதல் கொண்டேன் திரைப்படத்திலும் செல்வராகவனும் இயக்கத்திலேயே நடித்தார் தனுஷ். அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பு கொடுத்தது. ஆனாலும் ஒல்லியான தேகத்துடன் தனுஷ் கதாநாயகனாக நடித்த போது தொடர்ந்து அவரை உருவ கேலி செய்து வந்தனர் பொதுமக்கள்.

Dhanush at the Filmfare Awards South 2017 Press Meet

இருந்தாலும் அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் தனுஷ் நடித்து வந்தார். தமிழ் சினிமாவிலேயே அதிகமாக தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளான நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். பாடகி சுசித்ரா தொடர்ந்து நடிகர்களுக்குள் நடக்கும் நைட் பார்ட்டி குறித்து சில சர்ச்சையான விஷயங்களை பேசும் பொழுது அதிலும் தனுஷ் குறித்துதான் நிறைய பேசியிருந்தார்.

அதேபோல தமிழ் சினிமாவில் நடந்த நிறைய விவாகரத்து செய்திகளில் தனுஷின் பெயர் அடிபடுவதை பார்க்க முடியும் இப்படி பல நிகழ்வுகள் இருக்கும் நிலையில் தற்சமயம் தனது 50-வது திரைப்படம் நடித்து முடித்திருக்கிறார் தனுஷ். 50-வது திரைப்படம் என்பதால் தனுஷ் அவரே இயக்கி இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தனுஷின் பேச்சு:

இயக்குனர் செல்வராகவனும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்த பொழுது அதில் தனுஷ் அதில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியிருந்தார்.

அதில் அவர் பேசும் பொழுது சிறு வயது முதலே போயஸ் கார்டனில் வீடு வாங்க வேண்டும் என்பது ஆசையாக இருந்தது அது எனக்கு நானே அளித்துக்கொண்ட பரிசு என்று தான் சொல்ல வேண்டும் என்று சமீபத்தில் போயஸ் கார்டனில் வாங்கிய வீடு குறித்து கூறி இருந்தார் தனுஷ்.

பொதுவாகவே நடிகர்களுக்கு 50 வது திரைப்படம் 100 வது திரைப்படம் என்பது பெரிதாக வெற்றியை கொடுக்காது. ஆனால் தனுஷிற்கு ராயன் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படத்திற்கான புக்கிங்கிலேயே படம் அதிகமான வசூலை பெற்றிருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version