என் 2 பசங்களும் ரொம்ப பாவம்..! என் மனைவி ரொம்ப உஷார்..!

தமிழ் திரை உலகின் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தனுஷ் ஆரம்ப நாட்களில் பல்வேறு கேலிகளுக்கு உள்ளாகி இருக்கிறார்.

இதை அடுத்து தனது அபார திறமையின் மூலம் இன்று தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத முன்னணி நடிகராக திகழக்கூடிய இவரின் 50 ஆவது திரைப்படமான ராயன் திரைப்படம் அண்மையில் வெளி வந்து ரசிகர்களுக்கு விருந்தானது.

என் ரெண்டு பசங்க பாவம்..

ராயன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து அவரை இயக்கியிருந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்தது கூடுதல் பலமாக படத்திற்கு அமைந்திருந்தது.

இந்த படம் வெளி வந்த பிறகு படம் சொதப்பியதாக இருந்ததாக பலர் கூறி இருந்தாலும் வசூல் ரீதியில் ஒரு நல்ல சாதனையை புரிந்துள்ளது என்று சொல்லலாம். இந்த படத்தை அடுத்து சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

ரஜினியின் வீட்டு மருமகனாக மாறிய நடிகர் தனுஷ் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததற்காக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை பாராட்டி பேசி இருக்கிறார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு பிள்ளைகளுக்கு பெற்றோர்களாக மாறினார்கள்.

இந்நிலையில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா மூன்று என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானதை அடுத்து அவர் இயக்கிய வை ராஜா வை, லால் சலாம் போன்ற படங்கள் தோல்வி அடைந்த சூழ்நிலையில் இருவரும் தற்போது சட்டபூர்வமாக விவாகரத்து கேட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

என் மனைவி ரொம்ப உஷார்..

இந்நிலையில் தனுஷ் கொடுத்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக மாறி உள்ளது. அனேகன் பட சமயத்தில் எடுத்த இந்த பேட்டியில் தனது இரண்டு பசங்களை பற்றி பேசும் பொழுது இரண்டு பசங்களும் தன்னை போலத்தான் உருவத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் யாத்ராவை பற்றி கூறும் போது யாத்ரா குணத்தில் என்னைப் போல இருக்கிறான். உணவில் மட்டும் அவர் அசைவம் நான் சைவம் மற்றபடி பெரும்பாலும் என்னை போன்ற குணம் தான் அவனுக்கும் உள்ளது என்று சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து லிங்காவை பற்றி பேசும் போது லிங்கா அவர் அம்மா மாதிரி எப்பவுமே ரொம்ப உஷாரான பேர்வழி ஏமாத்தவே முடியாது அது போல தான் லிங்காவும் வளர்ந்து இருக்கிறார்.

இதனை அடுத்து அப்போதே தன் மனைவி ஒரு உஷாரான பேர்வழி என்பதை தனது மகன்களை கொண்டு வகைப்படுத்தி காட்டியிருக்கும் தனுஷின் இந்த பழைய பேட்டி இணையங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் ஓபன் டாக்..

மேலும் தனுஷ் ஓப்பனாக ஐஸ்வர்யா குறித்து கூறிய விஷயமும் அவர் மகன் குறித்து பேசிய ஓபன் ஆகும் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

மேலும் இந்த விஷயத்தை கேள்வி பட்ட ரசிகர்கள் இந்த விஷயம் தெரியாத அவர் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தைப் பற்றி பக்குவமாக எடுத்துச் சொல்வதோடு தனுஷ் தனது மனைவி பற்றி கூறிய உண்மைகளை அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version