நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் பல படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அந்த வரிசையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படத்திற்கு வாத்தி மற்றும் சார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வாத்தி திரைப்படமானது தனுஷ் ரசிகர்களால் மிகப் பெரிய அளவில் வரவேற்கப்படும் பாடமாக உள்ளது. மேலும் இதில் எத்தகைய ரோலில் தனுஷ் அசத்தியிருக்கிறார் என்று ரசிகர்கள் இப்போதே இதைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும் இந்தப் படத்துக்கு தனுஷுக்கு ஜோடியாக சம்யுத்தா நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் தற்போது படம் பிடிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தப் படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.
டிசம்பர் இரண்டாம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது தற்போது தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது.
ஏனென்றால் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் போதுமான அளவு வாத்தி படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத சூழல் நிலவுவதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் தீபாவளியன்று வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் ரிலீஸ் தேதி பற்றிய விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே நிச்சயமாக வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இது போலவே இந்தப்படமும் திருச்சிற்றம்பலம் படத்தை விட அதிக வசூலை பெற்றுத் தருவதோடு தனுஷின் பெயரை சொல்லும் படமாக இது அமையும் என்று ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
எனவே கண்டிப்பாக வரும் டிசம்பர் இரண்டாம் தேதி வாத்தி படம் ரிலீஸ் ஆகாது என்பது திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் இந்தப் படம் பொங்கலுக்கு நிச்சயமாக வெளி வரும் என்று காத்திருக்கிறார்கள்.
இதற்கான பதிலை நிச்சயம் படக்குழு கூறும் என்ற நம்பிக்கையில் தனுஷ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.