என்ன சொல்றீங்க.. வட சென்னை 2 குறித்த கேள்விக்கு தனுஷ் கொடுத்த அதிர்ச்சி பதில்..!

தமிழ் சினிமாவில் ஒல்லிப்பிச்சான் நடிகர் என நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் விமர்சிக்கப்பட்டவர் நடிகர் தனுஷ். ஆனால் இன்று அவரது கால்ஷீட் கேட்டு பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

தனுஷ்

நடிகர் தனுஷ், அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த படங்களில் மூலம், அவரிடம் சிறந்த நடிகர் இருப்பதை பலரும் அறிந்துக்கொண்டார்கள்.

அதற்கு முக்கிய காரணம், செல்வராகவன் நடிப்பை சொல்லிக்கொண்டு தன் தம்பி தனுஷை, நல்ல நடிகராக்கி உருவாக்கினார் என்ற உண்மையும் அதில் இருக்கிறது.

செல்வராகவன்

அந்த வகையில், ஒரு இயக்குநராக தன் அண்ணனை குருவாக தான் மதிக்கிறார் தனுஷ். அதனால்தான் ராயன் படத்தில் செல்வராகவனை வைத்து படம் இயக்குவதை, இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை என ஆச்சரியப்பட்டு, அதை எக்ஸ் தளத்தில், இரு தினங்களுக்கு முன் பதிவிட்டார் நடிகர் தனுஷ்.

ஏனென்றால் பெரும்பாலான இயக்குநர்களுக்குள் நல்ல நடிகர்கள் இருப்பார்கள். இதை பாரதிராஜா, மணிரத்னம், கே பாலசந்தர், கவுதம் மேனன், வெற்றிமாறன் என பலரும் நிரூபித்து இருக்கின்றனர்.

வெற்றிமாறன்

அதே போல் நடிகர் தனுஷின் சினிமா பயணத்தில் மற்றும் ஒரு திருப்புமுனையாக அமைந்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.

பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற படங்களின் மூலம், நடிகர் தனுஷை வேறு ஒரு தளத்தில் மாற்றிக் காட்டியவர் வெற்றிமாறன்தான்.

விடுதலை 2

அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படம் 2ம் பாகமாக உருவாக்கப்பட உள்ளது. ஆனால் வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2 படத்திலேயே இருக்கிறார். ஓராண்டுக்கு மேலாக அந்த படத்தில், படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் தனுஷ், வடசென்னை 2 படம் குறித்த சில முக்கிய விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:  தமிழ் சீரியலில்.. இயக்குனர்களுக்கு இதை செய்தால் தான் வாய்ப்பு.. ஆனால்,.. ரகசியம் உடைத்த சீரியல் நடிகை பிரவீனா..!

வட சென்னை இரண்டாம் பாகம்

தனுஷ் கூறியதாவது, வடசென்னை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை, வடசென்னை முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போது பாதி எடுத்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட 50 நிமிடத்திற்கான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன.

ஒரு கட்டத்தில் திடீரென எனக்கு இந்த உலகத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்று இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கேட்டுக் கொண்டார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

சுதந்திரத்தை கொடுக்க வேண்டும்

இருந்தாலும் ஒரு படைப்பாளியாக அவருக்கு உண்டான சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் என்பதால், அவர் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அதனை செய்துவிட்டு அதன் பிறகு வரட்டும் என்று முடிவெடுத்து அவருக்கு உண்டான நேரத்தை கொடுத்து இருக்கிறேன்.

இதையும் படியுங்கள்:  என் பேரன் என்னை பாட்டி என அழைக்கமாட்டான்.. இப்படித்தான் அழைப்பான்.. ராதிகா சொன்னதை கேட்டீங்களா..?

இப்போது அவர் அவருடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார்

எப்பொழுது அவருக்கு வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் துவக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்பொழுது நான் கண்டிப்பாக செய்து கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார் தனுஷ்.

என்ன சொல்றீங்க?

இதில் ஏற்கனவே வடசென்னை படத்தின் 50 நிமிட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன என்று தனுஷ்கூறிய விஷயத்தை கேட்டு ரசிகர்கள் என்ன சொல்றீங்க..? என்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version