மனைவியிடம் சேர காத்திருக்கும் தனுஷ்.. காரணம் இதுதான்.. இந்த விஷயத்தை யாரும் கவனிக்கலையே..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் தனுஷ் சினிமாவிற்கு வந்தபோது அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட இப்பொழுது தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது.

இதனாலேயே தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் பெண்கள் குறித்த எந்த ஒரு சர்ச்சையிலுமே தனுஷ் பெயர் அடிபட்டது கிடையாது. அதனால்தான் தனுஷ்க்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

காத்திருக்கும் தனுஷ்

ஆனால் திருமணத்திற்கு பிறகு அதிகமான சர்ச்சைகளில் தனுஷின் பெயர் இடம் பெற துவங்கியது. ரஜினிகாந்தை பொருத்தவரை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு தனது மகளை கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது.

ஆனால் அந்த ஆசை உடையும் வகையில் பிறகு நிறைய சம்பவங்கள் நடந்தன. முக்கியமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் பொழுது சுருதிஹாசன் மற்றும் தனுஷிற்கு இடையே உறவு இருப்பதாக பேச்சுக்கள் வலம் வர துவங்கின.

காரணம் இதுதான்

இது அப்பொழுதே பெரிய சர்ச்சையானது. இந்த மாதிரியான பல சர்ச்சைகளால் தனுஷிற்கும் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட துவங்கி இருந்தது. இதனை தொடர்ந்து சில வருடங்கள் பிரிந்தும் இருந்து வந்தனர்.

அதற்குப் பிறகு இந்த வருடம் அவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்தனர். இது குறித்து அப்பொழுது நிறைய பேச்சுக்கள் போய்க் கொண்டே இருந்தன. ஆனால் இப்பொழுது வரை முழுதாக தனுஷிற்கு அவரது மனைவியை பிரிய விருப்பமில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

யாரும் கவனிக்கலையே

இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது அவருடைய இரண்டு பிள்ளைகளும் பெற்றோர்களின் பிரிவின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிகாந்த்துமே திரும்ப தனுஷ் தன்னுடைய மகளுடன் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுவதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளுக்கு லைக் தெரிவித்து வருகிறார். அதேபோல சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனரின் பிள்ளைகள் படிப்பிற்காக வருடம் 10 லட்சம் ரூபாய் நிதியாக கொடுக்கப் போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இதற்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ் தனது மனைவி இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனவே தனுஷ் தனது மனைவியுடன் சேர்வதற்கு இப்பொழுதுமே தயாராக தான் இருக்கிறார் என்று பேச்சுக்கள் வர துவங்கியிருக்கின்றன. ஆனால் தனுஷோ அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்தோ இன்னமும் இது குறித்து எந்த ஒரு தகவல்களையும் கொடுக்கவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version