இன்று தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக உயர்ந்த அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் “ராயன்” இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலில் கூட மிகப் பெரிய சாதனை படைத்து வருகிறது.
வெற்றியின் உச்சத்தில் தனுஷ்:
இப்படி ஆன சமயத்தில் தனுஷ் மிகப்பெரிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். அதாவது தனுஷ் தொடர்ச்சியாக பல தயாரிப்பாளர்களிடம் நான் உங்களிடம் படத்தில் நடிக்கிறேன் எனக் கூறி அடுத்தடுத்து பல பேரிடம் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு பின்னர் நடிக்காமல் தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.
இப்படியான சமயத்தில் தான் தயாரிப்பாளர் சங்கத்திடம் இருந்து ஒரு அதிரடியான அறிவிப்பு வெளிவருகிறது.
அதாவது, நடிகர் தனுஷை வைத்து இனிவரும் காலங்களில் படம் எடுக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆலோசனை செய்த பின்பு தங்களது படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று அறிக்கையை வெளியிடுகிறது.
தனுஷுக்கு ரெட் கார்ட்?
இதனால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே மிகப்பெரிய அளவில் பரபரப்பாகிறது. இதையடுத்து நடிகர் தனுஷுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் விதித்து விட்டதா? என்ற கேள்வி ரசிகர்களை அதிரவைக்கிறது.
இதையடுத்து நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி “எங்களிடம் சொல்லாமலேயே நீங்கள் எப்படி அறிவிக்கலாம்” ? என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கேள்வியை முன்வைக்கிறார். விஷயம் கோலிவுட்டையே பிளவுபடுத்துகிறது.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் மனதிறந்து பேசிய பிரபல யூடுயூபரான அந்தகன், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி தயாரிப்பில் தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார்.
அந்த படம் கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிந்து விட்டதாக கூட கூறப்பட்டது. இப்படி படத்தின் சூட்டிங் போய்க்கொண்டிருந்த போது திடீரென நாகார்ஜுனா கால்ஷீட் கேட்டதும் அவருக்கு கால் சீட் கொடுத்து விடுகிறார்கள் .
முன்பணம் வாங்கிவிட்டு ஏமாற்றினாரா தனுஷ்?
இதனால் தனுஷ் படம் அப்படியே நின்று போனது. உடனே அந்த படத்தை போட்டு விட்டு அதிலிருந்து வெளியே வந்த தனுஷ்ன் தொடர்ச்சியாக அடுத்த பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் உச்சத்தில் போய் உட்கார்ந்து விட்டார்.
இன்று தனுஷ் மார்க்கெட் வேற லெவலில் இருக்கிறது. இந்த சமயத்தில் மீண்டும் அந்த திரைப்படத்தை ஸ்டார்ட் பண்ண முரளி ராமசாமி அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தனுஷ் நிச்சயம் என் படத்தில் நடித்த ஆக வேண்டும். வாங்கிய பணத்திற்காக அவர் நடிக்க வேண்டும் எனவே தனுஷ் டேட் கொடுங்கள் என கேட்கிறார். ஆனால் தனுஷ் டேட் கொடுக்காமல் தள்ளி தள்ளி போட்டுவருகிறார்.
அதன்பின்னர் தான் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் கொடுக்கிறார் முரளி இதனால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமே மிகப்பெரிய அளவில் பரபரப்படைகிறது .
இப்படிதான் நடிகர் நடிகைகள் வெளியில் வர வேண்டுமென்றால் 10… 15 ஜிம் பாய்ஸ்களை கூப்பிட்டு வந்து அவர்களுக்கும் தயாரிப்பாளர்களே காசு கொடுக்க வேண்டும் என அளப்பறை செய்கிறார்கள்.
கார்த்தி கூறுவது பொய்:
அது மட்டுமில்லாமல் நயன்தாரா தற்போது இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டு அவர் ஷூட்டிங் வந்தால் அவரின் இரண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளரே காசு கொடுக்க வேண்டும் எனக் கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
எனவே தனுஷ் கோடி கணக்கில் முன்பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளரின் தலையில் மண் அள்ளிப்போட்டு விட்டு இன்று உச்சத்தை பிடித்துவிட்டார்.
எனவே கார்த்தி, எனக்கு தெரியாது என கூறுவதெல்லாம் பொய். கோடிக்கணக்கில் வட்டிக்கட்டிக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமையும் கொஞ்சம் யோசிக்கவேண்டும் என அந்தகன் பேட்டியில் கூறியுள்ளார்.