நோய் நொடி ஏற்படாமல் சுபிட்சமாக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா? – தன்வந்திரி வழிபாடை செய்யுங்கள்..!!

இன்றைய சூழ்நிலையில் மனிதர்களது வாழ்நாள் அதிகரித்து இருந்தாலும் அந்த வாழ்நாள் முழுவதும் பல வித வியாதிகளால் நாம் கடும் அவஸ்தையை அடைந்து வருகிறோம். எனவே நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக வாழ வேண்டும் என்றால் நாம் கட்டாயம் தன்வந்திரி – யை வழிபட்டால்  போதுமானது.

நோய் நொடிகளை தீர்க்கும் தெய்வமான தன்வந்திரி பகவானை  வீட்டில் இருந்தே வழிபட்டாலும் நமக்கு நன்மைகள் கிடைக்கும். இந்த தன்வந்திரி பகவானுக்கு திரயோதசி மிகவும் விருப்பமான நாள் என்பதால் தேய்பிறை துரியோதசி அன்று வழிபடுவது சிறப்பைத் தரும்.

அதுவும் அமாவாசைக்கு முன் வருகின்ற திரயோதசி தன்வந்திரி பகவானுக்கு சிறப்பான நாளாகும். இந்த தன்வந்திரி கடவுளானவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்படுகிறார்.

 வடநாட்டவர்கள் அதிகம் வணங்கக்கூடிய இந்த கடவுளின் மந்திரத்தை தினமும் நோய்வாய் பட்டவர்கள் 21 முறை சொல்வதின் மூலம் நோய்களில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும். அது போல பிணி ஏற்பட்டு இருந்தால் அது மிக விரைவில் குணமாகும்.

தன் கையில் அமிர்த கலசத்தை வைத்திருப்பதால் அந்த அமிர்த கலசத்திலிருந்து கொடுக்கப்படக்கூடிய அமிர்தத்தின் மூலம் எத்தகைய நோயாக இருந்தாலும் அது சடுதியில் குணமாகும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 21 முறை எந்த நோயாளிகளும் ஜெபித்தாலும் அவர்கள் நோயிலிருந்து விடுதலை அடையலாம்.

தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன் வந்த்ரயே அம்ருத கலச

ஹஸ்தாய

சர்வாமய விநாசனாய

த்ரைலோக்யநாதாய

ஶ்ரீமஹா விஷ்ணவே நம:

மேலும் தீபாவளி அம்மாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரக்கூடிய துரியோதசி என்று தன்வந்திரி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

 இந்த ஜெயந்தியை தன்திரயோதசி என்ற பெயரில் வடநாட்டவர்கள் கொண்டாடி வருகிறார்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கவும் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விழாவில் தன்வந்திரி ஸ்லோகம் உச்சடனம் செய்யப்படுகிறது.

 நீங்களும் எந்த ஸ்லோகத்தை சொல்லி உங்கள் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் மேம்படுத்திக் கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version