தமிழ் திரை உலகில் மிக நன்கு அறிந்த இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்த சமுத்திரக்கனி மிகச்சிறந்த இயக்குனராக இருந்ததோடு மட்டுமல்லாமல் நடிகராகவும் விளங்கியிருக்கிறார்.
மேலும் இவர் தொலைக்காட்சியில் நாடகங்கள் பலவற்றை இயக்கி இருப்பது பலருக்கும் தெரியாது. இதனை அடுத்து தான் திரைத்துறைக்குள் நுழைந்து இருக்கிறார்.
அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி பற்றி தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் பேசிய விஷயம் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் சமுத்திரக்கனி..
இயக்குனர் சமுத்திரக்கனி 2003-ஆம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தை இயக்கியதின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதனை அடுத்து இந்த படத்தின் சிறந்த கதை வசனத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றவர்.
மேலும் 2004-ஆம் ஆண்டு நெறஞ்ச மனசு என்ற தமிழ் படத்தை இயக்கிய இவர் அதே ஆண்டு நாலு என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி இருக்கிறார். அத்தோடு 2009-ஆம் ஆண்டு வெளி வந்த நாடோடிகள் திரைப்படம் இவருக்கு மிக நல்ல பெயரை பெற்று தந்தது.
தமிழ், தெலுங்கு என்று நின்றுவிடாமல் கன்னட படத்தையும் 2012-இல் இயக்கிய இவர் 2014-இல் நிமிர்ந்து நில், 2016-இல் அப்பா போன்ற திரைப்படங்களை எடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
அண்ணன் இல்லாம அதை பார்க்கவே முடியாது..
இந்நிலையில் இவர் நடிகராக ஓரிரு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த வகையில் தனுஷோடு இணைந்து விஐபி திரைப்படத்தில் நடிக்கும் போது வசனம் பேச முடியாமல் திக்கி திக்கி பேசி பல டேக்குகள் எடுக்கப்பட்டதாக பேட்டி ஒன்று தனுஷ் கூறியிருக்கிறார்.
அத்தோடு அதனை அடுத்து வாத்தி திரைப்படத்தில் சமுத்திரக்கனி அண்ணன் நடிக்கும் போது ரெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நேரம் நிறைய டேக்குகள் வாங்கித்தான் நடிப்பார் என்று நினைத்ததாக தனுஷ் கூறினார்.
மேலும் அப்படி நினைத்தது தவறாகி விட்டது. ஓரிரு படங்களிலேயே மிகவும் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் அண்ணனிடம் இருந்ததால் அதிகளவு டேக் வாங்காமல் வாத்தி படத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
தாக்கிய நடிகர் தனுஷ்..
மேலும் தெலுங்கு படங்களிலும் ரவுண்டு கட்டி நடித்து வருவதாக நடிகர் தனுஷ் கூறிய விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும் சமுத்திரக்கனி அண்ணன் இல்லாமல் இதை பார்க்கவே முடியாது என்று தனுஷ் பேசிய பேச்சு தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு பல படங்களை இயக்கிய இவர் நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருப்பதை நினைத்து பெருமையாக பேசி இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து பேசும் பொருளாக மாற்றி இருப்பதோடு சமுத்திரக்கனியின் திறமையை பல்வேறு வகைகளில் தனுசே புகழ்ந்திருப்பதை வரவேற்று இருக்கிறார்கள்.