தனுஷின் பொறுமையை சோதிக்கும் சிவகார்த்திகேயன்.. இப்போ என்ன பேசியிருக்கார் பாருங்க..!

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் இருவருக்குமே அதிக அளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவர்கள் படங்களை விரும்பிப் பார்த்து மாஸ் வெற்றியும் தந்து விடுவார்கள்.

அந்த வகையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி அண்மையில் வெளி வந்த ராயன் திரைப்படம் இவருக்கு மிகச்சிறந்த வெற்றியை தந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு தற்போது இணையங்களில் வைரலாகி உள்ளது.

தனுஷின் பொறுமையை சோதிக்கும் சிவகார்த்திகேயன்..

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக விளங்கியதை அடுத்து நடிகர் தனுஷ் மூலம் 3 திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து திரையுலக வாழ்க்கையில் இந்த அளவு முன்னேறி வந்திருக்கிறார்.

எனினும் தனுஷ் தனக்கு செய்த மிகப்பெரிய உதவியை மறந்து விட்டு தற்போது தனுசை விமர்சனம் செய்யக்கூடிய வகையில் வளர்ந்து விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் சமீப காலமாக இவரது பேச்சுக்கள் உள்ளது.

இதனை அடுத்து தனுஷின் ரசிகர்கள் அண்மையில் கூட சிவகார்த்திகேயன் பேசிய பேச்சுக்கு பதில் அடி தரக்கூடிய வகையில் ஏற்கனவே தனுஷ் பேசிய பழைய வீடியோவை இணையத்தில் வெளியிட்டார்கள்.

இந்த வீடியோவில் தனுஷ் பேசும் போது தான் யாரையும் எதிர்பார்த்து சினிமாத்துறைக்குள் நுழைத்து விடவில்லை. எவரிடமிருந்தும் நான் நன்றியை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கடமையை நான் செய்தேன் என்பது போல பேசி இருந்தார்.

இதற்குக் காரணம் என்னை வளர்த்து விட்டவர்கள் என்று பலர் தன்னை பற்றி பேசி வருவதாக மறைமுகமாக சிவகார்த்திகேயன் அண்மையில் பேசியதை அடுத்து தனுஷின் ரசிகர்கள் அந்த வீடியோவை சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் பகிர்ந்தார்கள்.

இப்போ என்ன பேசி இருக்கார் பாருங்க..

இதனை அடுத்து மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் தற்போது சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் பேச்சால் தனுஷ் பொறுமையை இழந்து விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் அவரது பொறுமையை சோதித்துள்ளது.

இதற்குக் காரணம் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டி ஒன்று இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு எனக்கு பிடித்த திரைப்படம் வாழை திரைப்படம் தான் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பேசி இருக்கிறார்.

இதற்கு இடையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்கியிருந்தார். இதன் மூலம் மறைமுகமாக மாரி செல்வராஜ் கர்ணன் படத்தை இயக்கியிருந்தாலும் அது எனக்கு பிடிக்கவில்லை என்பதை மறைமுகமாக பேசி இருக்கிறார் சிவகார்த்திகேயன் என்று இணைய பக்கங்களில் ரசிகர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் தனுஷின் பொறுமையை சோதிக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் நடவடிக்கைகள் சமீப காலமாக இருப்பதாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் இது குறித்து உங்களுடைய பார்வையை பதிவு செய்யலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version