தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கக் கூடிய நடிகர் தனுஷ் தற்போது தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தில் நடித்து அவரே இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படமானது கடந்த வாரம் ஜூலை 26 ஆம் தேதி வெளி வந்த நிலையில் உலக அளவில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று அதிகளவு வசூலை வாரி தந்துள்ளது.
நடிகர் தனுஷ்..
இரண்டு கேங்ஸ்டர் மத்தியில் நடக்கின்ற விஷயத்தை கதையாக எழுதி இயக்கி இருக்கும் நடிகர் தனுஷ் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ராயன் திரைப்படம் அமைந்துள்ளது.
இதனை அடுத்து தனது பிறந்தநாள் பரிசாக இந்த படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றிகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் எழுதிய இயக்கிய இந்த திரைப்படமானது முதல் மூன்று நாட்களில் உலக அளவில் 75 கோடி வசூலித்து இருப்பதாக தனுஷ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது.
தனுஷ் போட்ட ஒற்றை போஸ்ட்..
இதனை அடுத்து தனுஷ் இந்த படத்தை பிளாக் பஸ் படமாக்கிய ரசிகர்களுக்கும் ஊடகவியலாளர்ளுக்கும் நன்றி தெரிவித்திருக்கக் கூடிய விஷயமானது ரசிகர்களின் மத்தியில் சந்தோஷத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த படத்தை பார்ப்பதற்காக தொடர்ச்சியாக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் அதிகரித்து வருவதாக சொல்லப்படக்கூடிய நிலையில் ராயன் பட வெற்றி குறித்து தனுஷ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கும் செய்தி தற்போது வைரலாகிவிட்டது.
அந்தப் பதிவில் மக்கள் பிரஸ் மீடியா மற்றும் தனக்கு துணையாக இருக்கும் தூண்கள் எனது ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் இது என்னுடைய சிறந்த பிளாக் பஸ்டர் பிறந்த நாள் பரிசு. ஓம் நமச்சிவாயா எனக் கூறி தனது நன்றிகளை தெரிவித்து இருக்கிறார்.
அதிர்ந்து போன மீடியா..
இந்த விஷயத்தால் தற்போது அதிர்ந்து போய் இருக்கும் மீடியா தனுஷின் இயக்கத்தில் வெளி வந்துள்ள இரண்டாவது திரைப்படத்திற்கும் அவரது நடிப்பிற்கும் பாராட்டுதல்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அடங்காத அசுரன் தானே பாடலில் உசுரே நீதானே என்ற வரிகள் வைரலானதோடு முதல் நாள் ஓப்பனில் கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றாலும் அடுத்தடுத்த நாட்களில் மிகச் சிறப்பாக ஓடி வசூலை வாரி எடுத்துள்ளது.
இந்த படத்துக்கு பக்க பலமாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள எஸ் ஜே சூர்யா, கிருஷ்ணா, துஷ்ரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் தங்களது பங்கை பக்காவாக செய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் தனுஷ் போட்ட ஒற்றை போஸ்ட் பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் சொல்லி இந்த விஷயத்தை வைரலான விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.