90 காலகட்டங்களில் இளையராஜா எப்படி பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்தாரோ அது போல ஏ ஆர் ரகுமானின் இசையானது திரை படங்களில் தொடர்ந்து வெளி வந்தது.
இதனை அடுத்து இசையமைப்பதில் நாட்கள் செல்ல செல்ல பல்வேறு இசையமைப்பாளர்கள் வெளி வர தொடங்கினார்கள் ஜிவி பிரகாஷ், அனிருத் போன்றவர்களை நாம் உதாரணமாக சொல்லலாம்.
தனுஷ் செய்த மோசமான செயல்..
பொதுவாகவே தனுஷின் ஆரம்பகால படங்களை எடுத்துப் பார்த்தால் அதில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்த படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை தந்திருக்கக் கூடிய நேரத்தில் ஐம்பதாவது திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைக்காதது ஏன் என்று இணையவாசிகள் பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
மேலும் அசுரன் பட இசை வெளியீட்டு விழாவில் என்ன நடந்தது தெரியுமா? அந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நாயகனே ஜீவி பிரகாஷ் தான். எனினும் ஜிவி பிரகாஷை தனுஷ் அந்த விழா மேடையில் கண்டுகொள்ளாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் கடைசியாக அவர் நின்று இருந்ததை நீங்கள் வீடியோவில் பார்த்தால் தெரியும்.
அடுத்து படிப்படியாக ஜீவி பிரகாஷை அந்த இசை தட்டு இருக்கக்கூடிய பக்கத்திற்கு வந்த பிறகும் கூட தனுஷ் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு பார்த்தும் பாராமல் இருந்தது போல செய்தது தனக்கு மிக நன்றாக நினைவில் இருப்பதாக செய்யாறு பாலு சொல்லி இருக்கிறார்.
ஜீவி பிரகாஷை தள்ளி உட்கார வைத்து..
இதை விட தான் இன்னொரு கூத்து என்ன வென்று சொன்னால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். அதுவும் இந்த அசுரன் வெற்றி விழாவில் தான் நடந்தது. அசுரன் படம் ஓடி 100 வது நாளை கடந்த நிலையில் இதற்கான வெற்றி விழா எடுக்கப்பட்டது.
இந்த விழாவானது சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் நடைபெற்றது. அசுரன் படத்தின் வெற்றிக்கு தனுஷ் நடிப்பு மட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்திற்கு பக்க பலமாய் இருந்தது ஜி வி பிரகாஷின் இசை என்று தான் சொல்ல வேண்டும்.
எனது அப்பாவால் எதுவும் நடக்காது என்று நினைத்த மகனுக்கு தன் எதுவும் முடியும் என்று நாய்கள் தாக்கும் போது தனது மகனைக் காப்பாற்ற அசுரனாக கிளம்பி வரும் தனுஷின் நடிப்பில் பின்னணியாக வந்த இசையை யாராலும் மறக்க முடியாது. அதனால் தான் எழுந்து நின்று ரசிகர்கள் கைதட்டி இருக்கிறார்கள்.
அது போல ஆடுகளம் வெற்றிக்கும் ஜிவி பிரகாஷின் பங்கு அளப்பரியது என்று சொல்லலாம். எனினும் அசுரன் நூறாவது பட வெற்றி விழாவில் அவருக்கு சீல்டு வழங்கப்பட்ட போது தனுஷ் மற்றவர்களோடு பேசியிருப்பது போல இருக்கின்ற வீடியோக்களை பாருங்கள்.
அப்போது உங்களுக்கு தெரியும் எனினும் இதைப்பற்றி கவலைப்படாமல் ஜிவி பிரகாஷ் டீசன்டாக நகர்ந்து போய்விடுவார்.
முகம் தொங்கி போன ஜீவி பிரகாஷ்..
அன்றைக்கு ஆங்கில பத்திரிகை ஒன்று அதிகமாக நேசிக்கப்படக்கூடிய நடிகர்களின் லிஸ்ட்டை வெளியிட அதில் முதல் இடத்தில் தனுஷும் நான்காவது இடத்தில் விஜயும் இருக்கிறார்கள்.
எனினும் ஜிவி பிரகாஷ் நான்காவது இடத்தில் விஜயை கொடுத்தது தவறு என்று அவர் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற தகவலை ட்விட்டரில் பதிவிட்டார்.
இது தான் அவர்களிடையே மோதல் ஏற்பட காரணமாக அமைந்தது. இதனை அடுத்து தான் அடுத்தடுத்த படங்களில் வேறு இசை அமைப்பாளர்களை வைத்து இசையமைக்க ஆரம்பித்தார்கள்.
அந்த வகையில் அனிருத் இவரது உறவினர் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாக செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து ஜிவி வாழ்க்கையிலும் தனுஷ் சுய லபத்திற்காக திட்டமிட்டு விளையாடிய கதையை அறிந்து கொண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்