ஏற்றத்தாழ்வுகள் என்பது எங்கு தான் இல்லை எல்லாத் துறைகளிலும் இது நீக்கமற நிறைந்து இருக்கிறது என்பதற்கு உதாரணமாக தான் தற்போது திவ்யதர்ஷினி பட்ட அவமானத்தை பகிர்ந்திருக்கிறார்.
திவ்யதர்ஷினி..
டிடி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படக் கூடிய திவ்யதர்ஷினி மிகச்சிறந்த தொகுப்பாளினியாக திகழ்கிறார். விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் படை காத்திருக்கும் என்று கூறலாம்.
இவர் தொலைக்காட்சியை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் சில தமிழ் படங்களிலும் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து இருக்கிறார். அந்த வகையில் இவர் காபி வித் காதல், சர்வம் தாராளமயம், கூர்கா, ப.பாண்டி, நள தமயந்தி, விசில் போன்ற படங்களில் நடித்திருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இவர் பேட்டி எடுக்க கூடிய பிரபலங்களோடு ஒப்பிடும்போது தான் சளைத்தவர் அல்ல என்று நினைப்பிக்க கூடிய வகையில் மேக்கப் மற்றும் எப்போதும் முகத்தில் சிரிப்போடு ரசிகர்களை கவரக்கூடிய இவர் அண்மையில் தனக்கு நடந்த சோகமான நிகழ்வு ஒன்றினை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ட்ரெஸ் மாத்திகிட்டு வா..
வெளியே பலரையும் சிரிக்க வைக்க கூடிய இவருடைய வாழ்க்கை மிகவும் அமைதியானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் கஷ்டங்கள் நிறைந்து உள்ளது. அத்தனையும் தாண்டித்தான் இன்று மிகப்பெரிய பிரபலமாக மாறி இருக்கிறார்.
இவரது தொகுப்பில் வெளி வந்த காபி வித் டிடி ரசிகர்கள் மத்தியில் படு பேமஸான நிகழ்ச்சியாக இருந்தது. அத்தோடு இவருக்கு ஒரு நல்ல இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.
தனது மண வாழ்க்கையில் சிறப்பாக அமையாமல் மிகப் பெரிய ஏமாற்றம் தந்தாலும், இனி அந்த இடத்தில் அடுத்ததாக எடுக்கப் போகும் முடிவு இது தான் என்பதில் இவர் உறுதியாக இருந்திருக்கிறார்.
மேலும் இவர் பேட்டி எடுக்க வேண்டிய ஒரு பிரபலத்தை பேட்டி எடுக்க மிகச்சிறப்பான முறையில் ஆடை அலங்காரத்தோடு காத்திருந்திருக்கிறார். அந்த பிரபல நடிகை வருவதற்கு தாமதம் ஆயிருந்தாலும், எந்த ஒரு நபரையும் பேட்டி எடுக்கும் போது டிடி கோபப்பட மாட்டாராம்.
அது போலவே நேரம் கழித்து வந்த நடிகையிடம் சிரித்து பேசிய போது அவர் டிடி வேற ஏதாவது காஸ்டியூம் நீங்க கொண்டுட்டு வந்து இருக்கீங்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். இதற்கு காரணம் டிடி அணிந்தது போலவே அந்த நடிகை உடை அணிந்திருந்தது தான்.
இதை அடுத்து அவரைப் போல உடை அணிந்திருந்தது பிடிக்காமல் தான் இப்படி கேட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட அவர் இன்னும் இது போல ஏற்றத்தாழ்வுகளை விரும்பும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் ஒரு தொகுப்பானியாக இருக்கக்கூடிய உங்களுக்கு ஏன் இது போன்ற உடை தேவையா? என்பதை கேட்காமலே கேட்பது போல் அவர் கூறிய வார்த்தைகள் இருந்ததாக டிடி தெரிவித்து இருப்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இனி வரும் காலங்களிலாவது ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் அனைவரும் நடந்து கொண்டால் அது மற்றவர் உணர்வை புண்படுத்தாமல் இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் டிடி கூறிய இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு உனக்கு எதுக்கு அந்த மாதிரி டிரஸ் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்பது போன்ற ரீதியில் ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.