தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி ரசிகர்களால் அன்போடு டிடி என்று அழைக்கப்படுகிறார். விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக விளங்கிய இவர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர் படையை தனக்காக வைத்திருக்கும் இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி இருக்கும் இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..
டிடியின் அசத்தலான பேச்சும் வசீகரிக்கும் பார்வையாலும் இவரது நிகழ்ச்சியை பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரிசை கட்டி காத்திருப்பார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 போன்ற நிகழ்ச்சிகளை தொகுப்பாளினியாக பணியாற்றியவர்.
இவர் பணி புரிந்த காபி வித் டிடி நிகழ்ச்சியானது பட்டி தொட்டி எங்கும் பரவி இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்ததை அடுத்து மிகச்சிறந்த தொகுப்பாளனிக்கான விருதை 2013-ஆம் ஆண்டு விகடன் வழங்கி சிறப்பித்தது.
இந்த நிலையில் இவர் தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை 2014 – ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதை அடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஆனதை அடுத்து 2017-இல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
இதனை அடுத்து டிடி விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி இணையங்களில் பல்வேறு வகையான தகவல்கள் கசிந்து வருகிறது.
எனினும் இது குறித்து எந்த விதமான நிலைப்பாட்டையும் டிடி இது வரை வெளிப்படையாக கூறியது இல்லை.
ஒரே நேரத்துல ரெண்டு பேர் கூட பண்றது தப்பு..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய டிடி தற்போது எக்ஸ் தளத்தில் பேசிய பேச்சானது தற்போது பரபரப்பாக பல மத்தியிலும் பேசப்படுகின்ற பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதற்கு காரணம் இவர் காதல் பற்றி கூறும் போது ஒரு மனிதனின் வாழ்க்கையில் காதல் என்பது ஒரு முறை அல்ல.. இரண்டு முறை, மூன்று முறை என வருவது தவறில்லை என்று சொன்னார்.
இதை அடுத்து பேசும் போது தான் ஒரு மிகப் பெரிய குண்டை தூக்கி போட்டார். அதாவது ஒரு மனிதருக்கு ஒரே நேரத்தில் பல காதல் உணர்வு ஏற்படுவது தான் மிகவும் பெரிய தவறு என்று நாசுக்காக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்.
திவ்யதர்ஷினி சொல்வதை கேட்டீங்களா பாஸ்..
இதனை அடுத்து திவ்யதர்ஷினி சொன்ன விஷயத்தை கேட்டீங்களா பாஸ் என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பேசப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.
மேலும் இந்த விஷயத்தை ஒளிவு மறைவு இல்லாமல் மிகவும் நாசுக்காக டிடி சொன்னதை அடுத்து அனைவரும் விரும்பத்தக்க வகையில் இருந்தது என்று சொல்லலாம்.
எனவே தான் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. அத்தோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.