என்னது.. நான் சீதாவை இரண்டாம் திருமணம் செய்து ஏமாத்திட்டனா..? இது தான் நடந்தது.. நடிகர் பகீர் தகவல்..!

80ஸ் காலகட்டத்தில் நட்சத்திர ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் சீதா. நல்ல அழகு லட்சணமான முகத்தோற்றத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நடிகை சீதா.

ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி ,ஆயிரம் பூக்கள் மலரட்டு,ம் பாரிஜாதம், புதிய பாதை உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் .

நடிகை சீதா:

இவர் அறிமுகமான புத்தகத்திலிருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டார். இதனிடையே வயதான பிறகு ஆதி,மதுரா, வியாபாரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அம்மா ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் .

80களில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை சீதா பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பெரும் புகழ்பெற்றிருக்கிறார் .

இவர் தமிழ் சினிமாவின் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே நடிகர் பார்த்திபனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சீதா அவரை 2001 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

சீதா இரண்டாம் திருமணம்:

இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா, ராக்கி என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதை அடுத்து பார்த்திபனை விவாகரத்து செய்த சீதா பின்னர் சீரியல் நடிகரான சதீஷை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

எனக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்பதற்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் உடனான வாழ்க்கை எனக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது என சீதா பேட்டிகளில் கூறினார்.

ஆனால், வெகு சில வருடத்திலேயே மீண்டும் சதீஷை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் சீதா. சதீஷை பிரிந்த பிறகு மீண்டும் பார்த்திபன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டார். ஆனால் பார்த்திபன் சம்மதிக்கவில்லை. தற்போது சீதா தனியாகவே வாழ்ந்த வருகிறார்.

இந்நிலையில் துணை நடிகரும் சீதாவின் இரண்டாவது முன்னாள் கணவருமான சதீஷ் பிரபல தெலுங்கு YouTube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.

அப்போது நான் நடிகை சீதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன். பார்த்திபனிடமிருந்து அவரை பிரித்தேன் என்றெல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள்.

ஏமாத்திட்டனா..?

உண்மையில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அதுதான் நிதர்சனமான உண்மை. ஒன்றாக வாழ்ந்தோம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.

ஆனால், நாங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். கணவன் மனைவியாக வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டோம் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகளாக வெளியிடுகிறார்கள்.

ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. பத்திரிக்கையாளர்களால் கிளப்பிவிட்ட செய்தி அதில் கொஞ்சம் கூட உண்மையே இல்லை.

இது சினிமா வட்டாரத்திலும், சீரியல் வட்டாரத்திலும், எங்களுடன் நடித்த நெருக்கமான நடிகர் நடிகைகளும் எங்களுடன் வேலை பார்த்த எல்லோருக்குமே இது தெரியும்.

மேலும் நான் சீதா உடன் சீரியலில் நடிக்கும் போதே பார்த்திபனுடன் அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது அதன் பிறகு தான் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

என்னுடைய மனைவியும் சீதாவுடனான நட்பால் தான் பிரிந்து சென்றார் எனலாம் செய்திகள் வெளியிடுகிறார்கள் .

இது தான் நடந்தது..

அதுவும் உண்மை இல்லை அதற்கு முன்பே என் மனைவி இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.

என்னை விட என் மகன்களை என்னுடைய மனைவி நன்றாக பார்த்துக் கொள்வார் என்பதால் நான் அவர்களை தொல்லை செய்யவில்லை.

மேலும் நான் சீதாவை பொருளாதார ரீதியாக ஏமாற்றி விட்டேன் என்றும் அவரது சொத்துக்களை அபகரித்து விட்டேன் என்றெல்லாம் செய்திகள் வெளியிடுகிறார்கள் .

ஆதாரமே இல்லாமல் இந்த உலகம் எதை வேண்டுமானாலும் பேசும் இது போன்ற பொய்யான செய்திகளை தயவு செய்து நம்பாதீர்கள்.

இப்போதும் நானும் சீதாவும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் அவர் வருவார் .

அதே போல் அவருடைய வீட்டில் விசேஷம் என்றால் நானும் செல்வேன். இப்படியாக எங்களுடைய நட்பு. ஆரோக்கியமாக தான் இருக்கிறது என சதீஷ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version