“நீ அந்த சாதியா.. வெக்கமா இல்ல..” வாய்ப்பு கொடுத்தவருக்கே ஆப்பு அடித்த சுசித்ரா..!

ஆர் ஜே வாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு தனது மிகச்சிறந்த குரலால் பின்னணி பாடகியாக திரைப்படத்துறையில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி பிரபலமானவர்தான் பாடகி சுசித்ரா.

மேலும் இவர் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பிரபலம் ஆனார். தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக வளர்த்தார்.

பாடகியாக சுசித்ரா:

அத்துடன் ஒரு சில திரைப்படங்களிலும் இவர் சிறு சிறு ரோல்களிலும் நடிக்கவும் செய்துள்ளார் . இந்த அளவுக்கு பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த சுசித்ரா மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும்போதே பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கார்த்தி குமார் சில படங்களிலும் சின்ன சின்ன குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிட்டத்தக்கது .

குறிப்பாக தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த. யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷின் தோழனாக நடித்திருப்பார்.

திருமணம் விவாகரத்து:

அந்த படத்தில் அவரது கேரக்டர் மக்கள் மனதில் அழுத்தமாக பதியும்படி அமைந்தது. இதனிடையே இவர்களது வாழ்க்கை மிக சுமூகமாக போய்க் கொண்டிருந்தது.

பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான் என்றாலும் கூட இருவருக்கும் இடையே பின்னாலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இதற்கான முக்கியமான காரணம் சுச்சி லீக்ஸ் கூறப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு சுசித்ராவின் அக்கவுண்டில் இருந்து பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர வைத்தது.

இதற்கு முழுக்க முழுக்க காரணம் சுசித்ரா தான் என கூறப்பட்டு வந்ததார்.இதனால் அவரது மார்க்கெட் அப்படியே சர்ர்ர்ரென சறுக்கி பாதாளத்தில் விழுந்து விட்டது.

அந்தரங்க சர்ச்சையில் சுசித்ரா:

இதனிடையே அவரது கணவரான கார்த்திக் குமார் சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் என பேட்டிகளில் கூறி அதிர வைத்தார் .

இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளே கிடைக்காமல் போய்விட்டது. ஆல் அட்ரஸ் இல்லாத அளவுக்கு லண்டனில் சென்று செட்டில் ஆகிவிட்டார் சுசித்ரா.

பின்னர் சுச்சி லீக்ஸ் விவகாரம் அப்படியே ஆய்ந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் சுசித்ரா பல்வேறு YouTube சேனல்களில் தொடர்ந்து சுச்சி லீக்ஸ் விவகாரத்தை குறித்தும் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களையும் போட்டு உடைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனக்கு பாடகியாக எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறி பெரும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

ஒருமுறை திரைப்பட விஷயமாக எதார்த்தமாக நான் இசையமைப்பாளராக இருந்த பரத்வாஜை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது நான் அவர் பேசுவதை பார்த்து என்னுடைய குரல் அவருக்கு பிடித்துப் போக நீ அந்த சாதியா? என்று கேட்டார். அதற்கு நான் ஆமாம் சார் என்று சொன்னேன்.

உடனே உங்களுக்கு பாட தெரியுமா? என கேட்டார் எனக்கு தெரியாது சார் என்று சொன்னவுடன் அவர் உடனே அந்த சாதியா இருந்துட்டு பாட தெரியலன்னு சொல்றியே வெக்கமா இல்ல? அப்படின்னு முகம் சுளிக்கும் வகையில் பேசினார்.

ஜாதி அடிப்படையில் வாய்ப்பு:

உடனே நான் இல்ல சார் எனக்கு அவ்வளவாக பாட தெரியாது. வெஸ்டன் ஓரளவுக்கு பாடுவேன் அப்படின்னு சொன்னேன்.

அதன் பிறகு தான் உன்னோட வாய்ஸ் டோன் ரொம்ப நல்லா இருக்கு நீ பாடினா நல்லா இருக்கும் என்று ஜே ஜே படத்தில் இடம்பெற்ற “மே மாசம் 98ல் மேஜர் ஆனனே” வாய்ப்பு கொடுத்தார் என பாடகி சுசித்ரா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஜாதியை வைத்து வாய்ப்பு கொடுக்கிறார்களா?என சுசித்ராவின் இந்த பேட்டியை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் கடுமையாக விமர்சித்து தள்ளி உள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது மீண்டும் சினிமா வட்டாரத்தில் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version