அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணியா..? நடிகையை வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை..!

சினிமா துறையைப் பொறுத்தவரை நடிக்க வேண்டும் என்று நடிகைகள் வாய்ப்பு தேடி வந்தால் நிச்சயம் அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டால் தான் அவர்களால் பிரபலமாக முடியும் என்பது கட்டாயம் ஆக பார்க்கப்படுகிறது.

நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட்:

சீரியல்களிலோ திரைப்படங்களிலோ வாய்ப்பு கேட்டு செல்லும் நடிகைகள் ஆடிஷனுக்கு செல்லும்போது அடுத்த ஆப்ஷனாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள் .

இதற்கு கட்டுப்படும் நடிகைகள். சினிமாவில் நடிக்க ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமாகி விடுகின்றனர்.

சில பேர் அப்படி ஒரு வாய்ப்பே எங்களுக்கு தேவையில்லை என சினிமா கனவு அடியோடு அறுத்துவிட்டு ஓடிவிடுகிறார்கள் .

அப்படித்தான் சமீப காலங்களாக நடிகைகள் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகளைப் பற்றியும் திரைத்துறையில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணியா..?

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான பானுபதியை சீரியல் நடிகை ரிஹானா தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக பேட்டி எடுத்திருந்தார்.

அப்போது பானுமதியிடம் நீங்கள் சீரியலில் நடிக்க அட்ஜஸ்மென்ட் செய்திருக்கிறீர்களா? என கேட்டதற்கு நடிகை பானுமதி சரியான பதிலடி கொடுத்து ரிஹானாவை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

அந்த பேட்டியில் பானுமதி கூறியதாவது… நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரவில்லை. சாப்பாடு சாப்பிட ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதற்காக நடிக்க வந்தேன்.

முதலில் கூட்டத்தோடு கூட்டமாக ஜீனியர் நடிகையாக நடித்துவந்த எனக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள்.

இப்போது பல சீரியல்களில் நடித்து வருகிறேன். இப்போது தான், இந்த துறையில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிற ஆசை வந்துள்ளது என்றார்.

இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது:

பின்னர் அட்ஜெஸ்ட்மென் குறித்து கேள்வி கேட்டதற்கு…. இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. இதற்கு பதில் சொல்வதால் இந்த துறை ஒன்று மாறிடப் போவதில்லை.

ரிஹானா இந்த கேள்வியை கேட்பதால் இது ஒன்று மாறிடாது. எனக்குள்ளும் ஒரு மீரா மிதுன் வனிதா விஜயகுமார் இருக்கிறார்கள். நான் பானுமதியாகவே வெளியில் தெரியத்தான் விரும்புகிறேன்.

அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான் என்று நான் பொதுவெளியில் வந்து சொல்வதால் இந்த துறை ஒன்று மாறிடப் போவதில்லை.

அப்படி இல்லை என்றால் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த அந்த நபரை அழைத்து வந்து இங்கே சேரில் உட்கார வைத்து நீங்கள் ஒன்றும் கேள்வி கேட்க போவதில்லை.

இதனால் இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என பானுமதி தடாலடியாக கூறினார். தொடர்ந்து பேசிய பானுமதி எல்லா நடிகைகளிடமும் ஏன் இந்த ஒரு கேள்வியை கேட்கிறீர்கள்?

வெளுத்து வாங்கிய சீரியல் நடிகை பானுமதி:

கேள்வி கேட்கும் நீயும் ஒரு பெண் நானும் ஒரு பெண் அப்படி இருக்கும் போது இதுபோன்ற கேள்வியை கேட்பது முதலில் தப்பு என்று உனக்கு தெரியவில்லையா?

இதனால்தான் ஒட்டுமொத்த மீடியாவும் கெட்டுப் போகிறது. அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசினால் தான் பிரபலமாக வேண்டும் என்றால் அப்படி ஒரு பேச்சு எனக்கு அவசியமே இல்லை என பானுமதி கூறினார்.

மேலும் பேசிய பானுமதி…. ரிஹானா நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி பிரபலமாகி இருக்கலாம் அதற்காக நான் பதில் சொல்ல முடியாது.

சமூகத்தை சீர்திருத்த வந்த ரிஹானா இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா? நீ கேமரா முன்னாடி உட்கார்ந்து எத்தனை பேர் முன்னாடி ஒரு பெண்ணின் கேரக்டரை அசிங்கப்படுத்தும் கேள்வியை ஏன் கேட்க வேண்டும் என சரமாரியாக வெளுத்து வாங்கினார் பானுமதி.

ரிஹானா பேப்பர் கையில் எடுக்கவா?

மேலும் பேசிய அவர் எத்தனையோ பேரின் பேப்பரை கையில் எடுத்துள்ள ரிஹானாவின் பேப்பரை நான் கையில் எடுக்கட்டுமா?

எல்லாருமே கேமராக்கு முன்னாடி பொய் சொல்றாங்க… அப்படித்தான் நீயும் இப்போ உக்காந்துகிட்டு என்கிட்ட பேசிட்டு இருக்குற.

நீ ஒரு முறை கேரவனில் உன்னுடைய உதவியாளரை வெளுத்து வாங்கி ஓட ஓட அடித்து விரட்டியது எனக்கு தெரியும்…. நீ ஏன் அவனை அடித்தாய் என்றும் எனக்கு தெரியும் என பானுமதி ரிஹானாவின் ரகசியங்களையும் அவிழ்த்துவிட்டார்.

இதனால் அந்த பேட்டி கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. தற்ப்போது இந்த நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam