என்னது பேட்டைக்காளி… வாடிவாசல்… ஒரே கதையா? குழம்பிய ரசிகர்களுக்கு சூடான பதில் தந்த வெற்றிமாறன்…!

தற்போது மனிதர்களிடையே காணப்படக்கூடிய யதார்த்தங்களை மட்டுமே  திரைப்படமாக எடுத்து வெற்றி தரக்கூடிய வெற்றிமாறன் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். தற்போது இவர் நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

 இதனை அடுத்து சூரரைப்போற்று படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார்.

 மேலும் இவரது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வரக்கூடிய இவ ராஜ் குமார் இயக்கத்தில் பேட்டைக்காளி என்ற வெப் சீரியலையும் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இந்த தொடரில் கலையரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை தொடர்ந்து கிஷோர்,  வேலராமமூர்த்தி,ஷீலா ஆகியோரும் இத்தொடரில் நடிக்கிறார்கள். இந்த தீபாவளிக்காக இத்தொடர் ஆஹா ஓடிடிதளத்தில் வெளியானது.

 மேலும்  பேட்டைக்காளி வெப் சீரியஸ், வாடிவாசல் படமும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. இந்த இரண்டு படத்தின் கதையும் ஒன்றுதான் என்று ரசிகர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்த சமயத்தில் அதற்கான தக்க பதிலை தற்போது வெற்றிமாறன் கொடுத்துள்ளார்.

 அது என்ன எனில் பேட்டைக் காளி இப்போதைய காலகட்டத்தில் உள்ள கதையை மையமாகக் கொண்டது என்றும் வாடிவாசல் தமிழ்நாட்டில் 1960களில் உள்ள காலகட்டத்தை மையமாகக் கொண்டது.

 எனவே இரண்டின் கதைக்களமும் வேறு, வேறு என்று மிகத் தெளிவான முறையில் இவர் விளக்கம் தந்திருப்பதால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் வாடிவாசல் படத்தை கற்பனை செய்து கொண்டு இப்போது ஏக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

1960 எனும்போது பரதேசி படத்தில் வருவது போல காட்சிகள் இருக்குமா என்று ரசிகர்கள் யூகம் செய்து வருவதால் இந்த கதை நகர்வு எப்படி இருக்கும் என்பது படப்பிடிப்பு முடிந்த பின்புதான் தெரிய வரும். எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூடுதலாக இப்போது வெற்றிமாறனின் பதில் மாற்றிவிட்டது என்று நாம் கூறலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam