தமிழ் சினிமாவில் பழம்பெறும் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான மனோரமா குணச்சித்திர நடிகையாகவும் ஹீரோயின் ஆகவும் குறிப்பாக காமெடி நடிகையாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்றவர்.
ஆட்சி மனோரமா என தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மனோரமா எம்ஜிஆர்,சிவாஜி கணேசன் ,ஜெமினிகணேசன், உள்ளிட்ட பழம்பெரும் நட்சத்திர ஹீரோக்களுடன் திரைப்படங்களில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.
நடிகை மனோரமா:
இவரது நகைச்சுவை கதாபாத்திரம் இன்று வரை மக்களால் பல தலைமுறைகள் கடந்தும் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 1500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நட்சத்திர நடிகையாக மனோரமா பார்க்கப்பட்டு வருகிறார்.
தமிழ் திரையுலகினராலும் திரைப்பட ரசிகர்களாலும் “ஆச்சி” என்ற அன்போடு அழைக்கப்பட்டு வந்த மனோரமா தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்து வந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து முதலமைச்சர்களுடன் சேர்ந்து நடித்த பெருமையைக் கொண்டவர் தான் நடிகை மனோரமா .
ஆம், அண்ணாதுரை, கருணாநிதி, ஆகியோர்களின் நாடக மேடைகளிலும் மனோரமா நடித்து இருக்கிறார். அத்துடன் எம்ஜிஆர், ஜெயலலிதா இவர்களுடனும் திரைப்படங்களில் நடித்து அசத்தி வந்தார் .
முதலமைச்சர்களுடன் நல்லுறவு:
மேலும், தெலுங்கு சினிமாவை எடுத்துக்கொண்டால் என்டி ராமராவ் உடன் தெலுங்கு படங்களில் பல படங்களில் இவர் நடித்து புகழ் பெற்றிருக்கிறார் .
அந்த அளவுக்கு திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி தனக்கு மிகப்பெரிய அரசியல் செல்வாக்கு கொண்ட நடிகையாகவும் மனோரமா பார்க்கப்பட்டார்.
நகைச்சுவை நடிப்பு திறமையைப் பிறவிலேயே கொண்டு வளர்ந்த நடிகை மனோரமா தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்து வளர்ந்தவர் .
வசதியான குடும்பத்தில் பிறந்த செல்வாக்கான மகளாக வளர்க்கப்பட்ட இவர் தந்தையின் நடத்தை சரியில்லாததால் அவருடைய தாய் மனோரமாவை அழைத்துக் கொண்டு காரைக்குடியில் குடிப்பெயர்ந்து அங்கு மனோரமாவை ஆறாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.
மனோரமாவின் ஆரம்பகால வாழ்க்கை:
பின்னர் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை தொடர முடியாத மனோரமா அங்கு உள்ள செட்டியார் வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார்.
தொடர் தனது அம்மாவுடன் பலகார வியாபாரத்தை தொடங்கி தொழில் செய்து வந்தார்கள். அந்த சமயத்தில் தான் நடன இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர்களுடன் மனோரமா நாடங்களில் நடிக்க துவங்கினார்.
“வைரம் நாடக சபா” நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடித்த போது இவரது திறமையை பார்த்து வியந்து போன நாடக கலைஞர்கள் இவருக்கு சினிமா வாய்ப்பை தேடி கொடுத்தார்கள் .
அதன் மூலம் திரைப்படத்துறைக்கு அடி எடுத்து வைத்தார் மனோரமா. இப்படித்தான் இவரது திரை வாழ்க்கை துவங்கியதாம்.
அதன் பின்னர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த பெருமைக்குரிய காமெடி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தார் மனோரமா.
காதல் திருமணம்… விவாகரத்து:
இதனிடையே தான் நாடகத்தில் நடிக்கும் போது தனக்கு பெரும் உதவியாக வாய்ப்புகள் கொடுத்த எஸ் எம் ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் நாடக நடிகர் மற்றும் திரைப்பட நடிகர் ஆக இருந்து வந்தார். 1964 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது .
அதன் பிறர் 1966 ஆம் ஆண்டு மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு பூபதி என்ற ஒரு மகன் பிறந்தார்.
திருமணமாகி ஒரு வருடத்திலேயே மகன் பிறந்ததால் மனோரமாவால் தொடர்ந்து நாடகங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
ஆனால், மனோரமா நாடகங்களில் நடித்தால் தான் தனக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் குவிக்கிறது என தெரிந்து கொண்டார் கணவர் எஸ் எம் ராமநாதன் .
மனோரமாவுக்கு குழந்தை பிறந்த 10 நாளிலேயே நாடகத்தில் நடிக்கும்படி அழைத்துள்ளார். ஆனால் மனோரமா அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் .
என்னுடைய உடல்நிலை இப்போது எந்த நிலையில் இருக்கு நடிக்க கூப்பிடுகிறீர்களே என கேட்டதற்கு அவர் கோபமாக வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
பிறகு மனம் மாறி வருவார் என எதிர்பார்த்தால் அவர் கடைசி வரை வரவே இல்லையாம் . அப்போதுதான் மனோரமாவுக்கு புரிந்ததாம் தன் கணவர் தன்னை நாடகத்தில் நடிப்பதற்காக ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் .
அவருக்கு உண்மையான காதல் இல்லை என புரிந்து கொண்ட மனோரமா அவரை முழுவதுமாக பிரிந்து விட்டார் .
தனிமையிலே கடைசி வரை வாழ்ந்து வந்தார். மனோரமா திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனுஷி என பலரும் அவரைப் புகழ் பாராட்டி இருக்கிறார் .
ECR பங்களாவில் இரவு விருந்து:
குறிப்பாக அவருடன் நடித்த நடிகர் நடிகைகளுக்கு ஏதேனும் உதவி என்றால் ஓடோடி வந்து செய்வாராம் மனோரமா.
அப்படித்தானே ECR பங்களாக்கலில் இரவு விருந்துகளில் கலந்து கொண்டு கையும் களவுமாக சிக்கும் நடிகைகளை காப்பாற்றும் ஒரு நடிகை என்றால் அது நடிகை மனோரமா தான் .
எந்த நடிகைகள் கெட்டு போன விஷயத்தில் அகப்பட்டுக் கொண்டாலும் முதலில் அவர்கள் அழைப்பது நடிகை மனோரமா வைத்தான் .
ஏனென்றால், நடிகை மனோரமா மட்டும்தான் ஐந்து முதலமைச்சருடன் சேர்ந்து திரைப்படங்களில் பணியாற்றியவர் .
அவருக்கு அரசு வட்டாரங்களில் இருக்கும் மரியாதை வேறு எந்த நடிகர் நடிகைகளுக்கும் கிடையாது. ஆனாலும், மனோரமா அதனை ஒரு நாளும் தவறான விஷயங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது கிடையாது.
நடிகை மனோரமாவிற்கு அரசுத்துறை வட்டாரங்களில் இருக்கும் செல்வாக்கு பலரும் அறியாத ஒரு விஷயம் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மனோரமாவுக்கு என தனி மரியாதை இருந்தது.
ஆனால் அதனை எந்த வகையிலும் தனது சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாதவர் நடிகை மனோரமா. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர் செய்வார்.
நடிகைகளுக்கு ஏதேனும் சட்ட சிக்கல் என்றால் அதனை தீர்த்து கொடுப்பதற்கு தன்னால் முடிந்த உதவிகளை நடிகைகளுக்கு செய்து கொடுப்பார்.
பல வகையில் ECR பங்களாக்களில் இரவு நேர பாட்டிகளில் கலந்து கொள்ளும் நடிகைகள் எக்கத்தப்பான விஷயங்களில் சிக்கிவிட்டால் முதலில் மனோரமாவிற்கு ஃபோன் செய்து கதறுவார்கள் .
கையும் களவுமாக சிக்கிய நடிகைகள்:
இரவு எந்த நேரமாக இருந்தாலும் நேரடியாக முதலமைச்சர்களுக்கு தொலைபேசியில் பேசக்கூடிய அதிகாரம் மனோரமாவிற்கு இருந்தது.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மனோரமா போன் செய்தால் அவருக்கு பதில் அளிக்க முதலமைச்சர்கள் தயாராக இருப்பார்கள் .
இப்படி பல நடிகைகளை மனோரமா காப்பாற்றி இருக்கிறார். ஒரு வேலை மனோரமா அவர்களை காப்பாற்றாமல் இருந்திருந்தால் அவர்களுடைய மார்க்கெட் காலியாகி அவர்களுடைய பெயர் பொதுவெளியில் நாறிப் போய் இருக்கும்.
ஆனால் அந்த நன்றியை கூட பல நடிகைகள் யோசித்துப் பார்க்க தவறிவிட்டனர் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் .