அதற்காக.. வெட்ட வெளியில் உடை மாற்றிய நடிகை மீனா..! ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்..!

காந்த கண்ணழகி லுக்கு விட்டு கேக்கு ஏற்றும்.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது கண்ணழகால் பலரையும் கவர்ந்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

நடிகை மீனா..

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து முத்து, எஜமான் போன்ற படங்களில் நடித்து அசத்திய இவர் தனது அபார நடிப்பால் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தார்.

மேலும் ரஜினி, மீனா நடிப்பில் வெளி வந்த முத்து திரைப்படம் ஜப்பான் நாட்டில் சக்கை போடு போட்டு ஓடியது பலரையும் ஆச்சிரியத்தில் தள்ளியது.

திரை உலகில் பிஸியாக இருந்த சமயத்தில் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவரும் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை மீனா தனது கணவரது இறப்புக்குப் பிறகு சோகத்தில் இருந்த நிலையில் தற்போது அந்த சோகத்தில் இருந்து வெளியே வந்து திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

வெட்ட வெளியில் உடை மாற்றிய விஷயம்..

இதனை அடுத்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து இருக்கும் எவர்கிரீன் நடிகையான நடிகை மீனா பற்றி சேரன் அண்மையில் பேசிய பேச்சு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக மாறியுள்ளது.

என்பது, 90-களில் கேரவன் புழக்கம் அதிகம் இல்லாத போது நடிகை மீனா பொற்காலம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் ஒரு சீனில் இவர் தனது புடவையை காய போடுவது போல ஒரு சீன் எடுக்க வேண்டி இருந்தது.

அந்த சமயத்தில் அவர் கட்டி இருந்த புடவையின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்ததால் கேமராமேன் புடவையானது அந்த சீக்குவன்ஸுக்கு சரியாக இல்லை என்று சொன்னதோடு பச்சை நிறமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

ரகசியம் உடைத்த பிரபலம்..

இதனை அடுத்து ஷூட்டிங் நடக்கக்கூடிய பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். ஆனால் அந்த நேரத்தில் நாம் ஷூட்டிங்கை முடித்து விட வேண்ட கூடிய சூழ்நிலை இருந்தது.

அந்த சமயத்தில் தான் மீனா என்னிடம் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க நான் இந்த விஷயத்தை கூறிய உடன் அவர் சிரித்த முகத்தோடு நான்கு புடவைகளை கவர் செய்து கொண்டு அந்த இடத்தில் உடையை மாற்றி வந்து விட்டார். இதைவிட எந்த நடிகை இப்படி நடந்து கொள்வார் என்று சொல்லி இருக்கிறார்.

இதை அடுத்து வெட்ட வெளி என்று கூட பார்க்காமல் நேர்த்தியான முறையில் புடவையை கட்டிக்கொண்டு அந்தச் சீனை நடித்து முடித்துக் கொடுத்தார் என்று சேரன் உணர்ச்சிவசப்பட்டு பேசிய பேச்சு இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மீனாவின் டெடிகேஷன் பற்றி கூறி வருவதோடு இதனால் தான் இன்றும் திரை உலகில் நிலைத்து நிற்க முடிகிறது என்ற கருத்தை முன்வைத்து வருகிறார்கள்

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version