போதை வழக்கை மறைக்கவே நீட் பத்தி பேசுறார் அமீர்..! விளாசும் பிரபல நடிகர்..!

சினிமா பிரபலங்கள் எந்த விஷயங்களை தொட்டாலும், அது பரபரப்பான தீயாக பற்றி எரிந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடுகிறது. ஏனெனில் குற்றவாளி நபர்களுடன் ஒருவருக்கு தொடர்பும், பழக்கமும் இருக்கிறது என்பது உறுதியாகும் போது, சம்பந்தப்பட்ட நபர் மீதும் சந்தேக பார்வை என்பது தவிர்க்க முடியாதது.

இயக்குனர் அமீர்

சமீபமாக போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், இயக்குனர் அமீர் பெயர் அடிக்கடி அடிபடுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

அதாவது போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட நபருடன், அமீரும் நட்பில் இருந்தார் என்பது இதில் சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

ஆனால் என் மீது எந்த தவறும் இல்லை; என்னிடம் எந்த குற்றச் செயல்களும் இல்லை. அதனால் நான் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்று தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருகிறார் இயக்குனர் அமீர்.

பருத்திவீரன் விவகாரம்

பருத்திவீரன் படம் தயாரிப்பு விவகாரத்தில் தனக்கு சூரியா குடும்பம் இழைத்த அநீதியை வெளியே சொல்லாமல், 17 ஆண்டுகளாக நீதியை எதிர்பார்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து காத்திருந்தவர் இயக்குனர் அமீர்.

17 ஆண்டுகளுக்கு முன் தயாரித்த படத்துக்கு, இன்றைய தேதிக்கு தயாரிப்பு தொகையை வட்டியுடன் வசூலிப்பது என்று சக இயக்குனர்கள் சொன்ன போது, அது எல்லாம் கூடாது. நான் செலவு செய்த தொகை தந்தால் போதும், வட்டி எல்லாம் வேண்டவே வேண்டாம் என்றும் நேர்மையாக கூறியவர் அமீர்.

குணச்சித்திர நடிகர் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமாவில், சில சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர் வில்லனாக, ஹீரோ அல்லது ஹீரோயின் அப்பாவாக, மாமா, சித்தப்பா போன்ற குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவ்வப்போது அரசியல் விமர்சகராகவும் தனது பொதுவான சமுதாய கருத்துகளை வெளியிடுகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணல் பங்கேற்ற நடிகர் ரவிச்சந்திரன் கூறியதாவது, இயக்குனர் அமீர் எப்போதுமே திரைப்பட விழாக்களில், சினிமா சார்ந்த விழாக்களில், பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார்.

எப்போது அவர் கலந்து கொண்டாலும், சினிமா சார்ந்து நிறைய விஷயங்களை பேசுவார். சினிமாத்துறையில் உள்ள பொதுவான பிரச்சனைகள் குறித்தும், அப்போது உள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்தும் வெளிப்படையாக பேசுவார்.

சர்ச்சைகளில் சிக்கும் நடிகர் நடிகைகள் குறித்தும் தனது கருத்துக்களை பதிவிடுவார். அதேபோல் அரசியல் சார்ந்த விஷயங்களையும் எவ்வித தயக்கம் என்று சினிமா விழாக்களில் கூட பேசியிருக்கிறார்.

நீட் குறித்து பேசுவது ஏன்?

ஆனால், சமீபத்தில் நீட் தேர்வு குறித்து பேசியிருக்கிறார். சில கருத்துகளையும் சொல்லி இருக்கிறார். எப்போதுமே பொதுவெளியில் நீட் குறித்து பேசாத இயக்குனர் அமீர், இப்போது போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் அவர் பெயர் அடிபட்ட பிறகு, இப்போது நீட் விவகாரம் குறித்து பேசுகிறார்.

எனவே இதில் அவரது சுயநலப் போக்கு இருக்கிறது என்பது போல், ரவிச்சந்திரன் ஒரு கருத்ததை அவர் பதிவிட்டு இருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போதை வழக்கை மறைக்கவே நீட் பத்தி பேசுறார் அமீர் என்று நேர்காணல் ஒன்றில் விளாசி இருக்கிறார் பிரபல நடிகர் ரவிச்சந்திரன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam