தமிழ் திரை உலகில் ஒரு சில படங்களில் நடித்தும், சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனராக விளங்கும் உமாபதி ராமையா நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவின் மகன் என்பது உங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும்.
இதனை அடுத்து தமிழ் திரை உலகில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த அதாகப்பட்டது மகாஜனங்களாய் என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுக நாயகனாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
என்னடா.. இது யாஷிகாவுடன் காதல்..
இதனை அடுத்து ரசிகர்களின் மத்தியில் வாரிசு நடிகராக களம் இறங்கிய இவர் தனது தந்தையின் படமான மணியார் குடும்பம் படத்தில் 2018-ஆம் ஆண்டு நடித்ததை அடுத்து சேரனின் திருமணம் என்ற படத்தில் 2019-ஆம் ஆண்டு நடிகர் உமாபதி மணமகனாக நடித்தார்.
இவரது தந்தையும் திரையுலகில் ஆரம்ப காலத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நகைச்சுவை வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததோடு கிடைக்கின்ற சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களையும் ஏற்றுக்கொண்டு நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பொறியியல் பட்டதாரியான உமாபதி நடிப்புத் துறையில் வருவதற்காக நடிப்புக்கு தேவையான பலவற்றையும் கற்றுக் கொண்டிருக்கிறார். அதற்காக நடனம் தற்காப்பு கலை போன்றவற்றை கற்றுக் கொண்டார்.
இவர் நடித்த சில திரைப்படங்கள் வெளியாகவில்லை என்றாலும் இவர் தொலைக்காட்சியில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் என்ற ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்.
அடுத்து ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்ற இவர் அடுத்தடுத்து தனது படங்கள் ரிலீஸ் ஆக தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டார். அத்தோடு இவர் இயக்குனராகவும் களம் இறங்கி உள்ள நிலையில் ராஜ கிளி என்ற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அர்ஜுன் மருமகன்..
இந்தப் படத்தைப் பொறுத்த வரை சமுத்திரக்கனி படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு தம்பி ராமையாவும் இந்த படத்தில் தனது மகனோடு இணைந்து கலக்கி இருக்கிறார்.
தற்போது தம்பி ராமையாவின் கருத்துப்படி என்ன வேலை செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்த வேலையாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என தனது மகனுக்கு அறிவுரைகளை தந்து இருக்கிறார்.
இதனை அடுத்து தம்பி ராமையா ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளை மருமகளாக்கிக் கொண்டதை அடுத்து சம்பந்தி ஆகிவிட்டார். அந்த வகையில் ஜூன் 10-ஆம் தேதி 2024 அன்று சென்னை வரும் பக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் உமாபதி ராமையா விற்கும் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் திருமணம் நடந்தது.
இயக்குனர் உமாபதி ராமையா பற்றி தெரியுமா?
இந்த திருமணமானது காதல் திருமணம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். உமாபதி ஐஸ்வர்யாவை விட ஒரு வயது குறைந்தவர் எனினும் இவர்கள் காதல் எப்போது ஏற்பட்டது, எப்படி சந்தித்தார்கள் என்பது போன்ற விவரங்கள் இன்று வரை தெரியவில்லை.
மேலும் உமாபதி ராமையாவின் திருமண விஷயம் ஆனது நடிகர் செந்தில் மூலம் தான் வெளியே தெரிய ஆரம்பித்தது. இதனை அடுத்து அனைவரும் இவர்களது காதலுக்கு மட்டுமல்லாமல் திருமணத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தார்கள்.
இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி விடுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.