தனித்தீவில் இந்த ஆண் பிரபலத்துடன் இருக்க ஆசை.. வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளாக வந்து வாய்ப்பைப் பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் தனது கணவரான தனுஷை கதாநாயகனாக வைத்து திரைப்படத்தை இயக்கியிருப்பார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.

ஆனால் பிறகு தொலைக்காட்சிகளுக்கு வந்த பொழுது அந்த திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படம்தான் நடிகை சுருதிஹாசனுக்கும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனராக ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இயக்குனராக வாய்ப்பு:

2015 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வை ராஜா வை என்கிற திரைப்படம் வந்தது. வித்தியாசமான கதை அமைப்பை கொண்ட அந்த திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

அதற்கு பிறகு சில வருடங்கள் திரைப்படமே இயக்காமல் இருந்து வந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த வருடம் அவரது இயக்கத்தில் லால் சலாம் என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படமும் பெரிதாக வெற்றியை பெறவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கப் போவதாக கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவது மேல்தான் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார்.

சொந்த வாழ்க்கையில் பிரச்சனை:

ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொந்த வாழ்க்கையை பொருத்தவரை அதில் அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருந்து வந்தது என்றுதான் கூற வேண்டும். திருமணமான பிறகு வெகு நாட்களாக அவர்களுக்குள் பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

3 திரைப்படத்தின்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்க்கும் தனுஷிற்க்கும் இடையே பிரச்சனைகள் உண்டாகி இருந்தது. இந்த நிலையில் அவர்கள் தற்சமயம் விவாகரத்து வாங்குவதற்கு இருக்கின்றனர்.

தொடர்ந்து திரைப்படங்களை இயக்க இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை தனி தீவில் விட்டு யாராவது ஒரு நபருடன் இருக்க வேண்டும் என்று கூறினால் எந்த ஒரு நபருடன் இருப்பதற்கு ஆசைப்படுவீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த அவர் இயக்குனர் ஷங்கர் மற்றும் ராஜமௌலியுடன் இருக்கதான் ஆசைப்படுவேன் ஏனெனில் அவர்களிடம் தெரிந்து கொள்வதற்கும் பேசுவதற்கும் எனக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version