பாலிவுட் போனதும் கொட்டோ கொட்டுன்னு கொட்டிய பணம்…. அட்லீ மனைவி செய்யப்போகும் சம்பவம்!

இந்திய சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அட்லீ இவர் முதன்முதலில் குறும்படங்களை இயக்கி அதன் பிறகு இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

ஷங்கரின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லீ அவரது இயக்கத்தில் வெளிவந்த நண்பன் எந்திரன் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

இயக்குனர் அட்லீ:

அதை எடுத்து ஆர்யா நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் 2013 ஆம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார்.

அட்லீ முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து முகப்புத்தகம் என்றும் குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரியா.

பிரியாவை காதலித்து அட்லீ திருமணம் செய்து கொண்டார். அட்லீ இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளிவந்த விஜய்யின் திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்தது.

தெறி , மெர்சல் , பிகில் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது. அடுத்தடுத்து தொடர்ந்து விஜய்யின் திரைப்படங்களை இயக்கி வந்ததார்.

இதனிடையே அட்லீக்கு மிகப்பெரிய பெயரும் புகழும் கிடைத்தது. இவர் மிகச்சிறந்த இயக்குனராக பெயர் எடுத்தாலும் இவர் பல படங்களை காப்பியடித்து அதன் கதைகளை திருடித்தான் புதிய படங்களை எடுக்கிறார் என விமர்சனங்கள் எழுந்து வந்தது .

கொட்டோ கொட்டுன்னு கொட்டிய பணம்:

ஆனால், அது எல்லாம் அவர் காதில் கூட போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய பாணியில் படங்களை எடுத்து தொடர் வெற்றிகளை குவித்து வந்தார்.

அதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஸ்டார் நடிகரான ஷாருக்கான் வைத்து படம் இயக்கம் வாய்ப்பு கிடைத்தது .

ஆம் ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி படைத்தார் அட்லீ. இதன் மூலம் இந்திய சினிமாவில் பிரபலமான இயக்குனர் என்ற பெயரை எடுத்தார்

ஜவான் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது .

இதனால் பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனர் என முதல் படத்திலிருந்து இடத்தை ஆழமாக நிலைநாட்டிக் கொண்டார் அட்லீ .

அடுத்தடுத்து அவரது அவரது இயக்கத்தில் படங்களில் நடிக்க வேண்டும் என ஸ்டார் நடிகர்களே வாய்ப்பு கேட்கிறார்கள். அந்த அளவுக்கு இயக்குனர் அட்லீயின் வளர்ச்சி உச்சத்தை தொட்டு இருக்கிறது .

அடுத்ததாக மீண்டும் சாருக்கானை வைத்து லயன் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இதற்கு இடையே தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் திரைப்படத்தையும் அவர் இயக்கி வருகிறார் .

அட்லீ மனைவி செய்யப்போகும் சம்பவம்:

பேபி ஜான் என்ற இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சமந்தா ரோலில் நடிக்கிறார் . இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவலை என்னவென்றால் அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ புதிய தொழில் ஒன்றை சொந்தமாக துவங்கி இருக்கிறாராம்.

அது குறித்து அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அதாவது பேஷன் தொடர்பாக புதிய தொழிலை துவங்க இருக்கும் பிரியாவுக்கு கணவர் அட்லீ மிகவும் சப்போர்ட்டாக இருந்து வருகிறாராம்.

மேலும் இதன் லோகோ இன்று வெளியாகும் என பிரியாவே அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பாலிவுட்டில் குறி வைத்து அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடத்தை பிடித்து இருக்கிறார் அட்லீ.

பாலிவுட்டுக்கு சென்றதும் அவருக்கு வருமானமும் சம்பளம் அதிகரித்து விட்டதால் தனது மனைவியின் லட்சியத்தை தேடி சென்று அவருக்கு பிடித்தமான விஷயங்களில் கவனத்தை செலுத்தி ஊக்கம் அளித்து வருகிறார் அட்லீ. இந்த தம்பதிகளின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version