டார்ச்சர் செய்த இயக்குனர்.. காலில் விழுந்த கதறிய நடிகை லைலா..! யார் அந்த இயக்குனர் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டு வித்தியாசமான இயக்குனராக விளங்குபவர் பாலா. இவர் படங்கள் என்றாலே கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கக்கூடிய வகையில் இருக்கும்.

மேலும் ஒவ்வொரு படத்தின் கதையிலும் வித்தியாசத்தை அதிகளவு காட்டக்கூடியவர். மேலும் களிமண்ணாக இருக்கும் நடிகர், நடிகைகளை அவர் வழியில் பிடித்து எப்படி தேவையோ அப்படி நடிப்பில் ஜொலிக்க வைத்துவிடுவார்.

இயக்குனர் பாலாவிடம் நடிக்கும் நடிகருக்கும் சரி, நடிகைகளுக்கும் சரி உள்ளுக்குள் ஒரு கலக்கம் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்குமாம். அந்த வகையில் இவர் நடிப்பை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கற்றுக் கொடுக்கும் போது பல விதமான கெட்ட வார்த்தைகளும் மிஸ் ஆகாமல் வந்து அவர்களை பயமுறுத்தும்.

அதற்கு உதாரணமாக நடிகர் சூர்யா சாக்லேட் பாயாக நடித்தவர். அவரை நந்தா படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைத்தார். மேலும் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார்.

இந்த படத்திற்காக லைலாவை ஒப்பந்தம் செய்திருந்த சமயத்தில் படத்தின் கதை பற்றி எதுவுமே கூறாமல் தான் அவரை நடிக்க வைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஷூட்டிங் சமயத்தில் படாத பாடு படுத்தி இப்படி செய், அப்படி செய் என்று வெகுவாக படுத்தி விட்டார்.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் லைலா ஹோட்டல் ரூமுக்கு வந்து தன் தாயிடம் கதறி அழுது இந்த படமே வேண்டாம். இப்படியே ஊருக்கு போய்விடலாம் என்று கூறி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாமல் அந்த இயக்குனர் கதை ஏதும் சொல்லாமல் எதை செய்தாலும் தன்னை திட்டி வருவதோடு படாத பாடு படுத்துகிறார் என்று புலம்பினார்.

அதற்கு லைலாவின் அம்மா படம் பாதி அளவு முடிந்து விட்டது. கொஞ்சம் தான் உள்ளது. பொறுத்துக் கொள் என சமாதானம் செய்து ஷூட்டிங்கிற்கு அனுப்பி வைத்தார். எனினும் ஷூட்டிங் போவது என்றாலே  மிகப்பெரிய கஷ்டமாக லைலாவுக்கு இருந்ததாம்.

ஒரு வழியாக பட ஷூட்டிங் முடிந்தும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்ற லைலா, சென்சருக்கு படம் போவதற்கு முன்பு பட குழுவிற்கு படம் போட்டுக் காட்டப்படும் நிகழ்வில் வெறுப்பாக போய் அமர்ந்திருக்கிறார்.

ஆனால் அவருக்கு அந்த படத்தைப் பார்க்கும் போது கடும் அதிர்ச்சி ஏற்பட்டு விட்டதாம். அட நம்மளா? இப்படி? நடித்திருக்கிறோம் என்று கண்களை கசக்கிப் பார்த்திருக்கிறார். பின்னர் இந்த படம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை தந்ததோடு லைலாவின் கதாபாத்திரமும் பேசும் பொருளானது.

இதனை அடுத்து பாலாவை தவறாக புரிந்து கொண்ட லைலா நேரடியாக இயக்குனர் பாலாவை பார்க்க சென்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத பாலா சிரித்தபடியே லைலாவிற்கு பாராட்டுதல்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக்கி விட்டது. மேலும் இயக்குனர் பாலாவின் திறமையை ஒவ்வொருவரும் எண்ணி பூரித்து போனார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam