சிவாஜிக்கு பிறகு இவர் மட்டும் தான்.. வேற யாரும் கிடையாது.. பாக்யராஜ் ஒரே போடு..!

முந்தானை முடிச்சு முருங்கக்காய் மூலம் பேமஸான பன்முக திறமையை கொண்ட அற்புதக் கலைஞர் பாக்யராஜ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் திரை உலகில் நடிகனாக, இயக்குனராக, இசையமைப்பாளராக தனக்கு என்று ஒரு தனி சிம்மாசனத்தை போட்டு அமர்ந்த பாக்யராஜ் தற்போது சிவாஜிக்கு பிறகு மோகன் தான் என்று பேசிய பேச்சானது அட பாக்கி இப்படி சொல்லிட்டாரே என பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

சிவாஜிக்கு பிறகு இவர்..

சிவாஜிக்கு பிறகு மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வெள்ளி விழா நாயகன் மோகனின் பாடல்கள் தான் என்று பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டு இருப்பதாகவும், முக பாவனைகளால் அசால்டாக ரசிகர்களை ஈர்த்திருக்கக் கூடிய வல்லமை சிவாஜிக்கு பிறகு மைக் மோகனுக்கு மட்டும் தான் உள்ளது.

இந்நிலையில் பல வெற்றி படங்களை கொடுத்த மைக் மோகன் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எண்பதுகளில் முன்னணி நாயகனாக விளங்கிய இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்ததோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவில் திரையுலகில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீர் என எங்கு சென்றார் என்று தெரியாமல் காணமல் போனார்.

இந்நிலையில் மீண்டும் கோட் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கக்கூடிய மைக் மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பது கூடுதல் சுவாரசியத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருப்பதாகவும் இந்த படத்தில் மைக் மோகன் காண அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

வேற யாருமே இல்ல..

மேலும் மைக் மோகன் ஹாரா என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க எந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் ஜூன் ஏழாம் தேதி வெளியாகும் என தெரிய வந்துள்ளது. தற்போது 68 வயதை எட்டி இருக்கும் மோகன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிர வைத்துள்ளது.

இந்நிலையில் தனது 68 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய மோகனைப் பற்றி பாக்கியராஜ் பேசும் போது இவர் படத்தில் இடம் பிடித்த பாடல்கள் பற்றி சொல்லி ஆக வேண்டும் என்று சொன்னதோடு, சிவாஜிக்கு பிறகு பாடலிலும் சிறந்த நடிகை வெளிப்படுத்தியவர் மோகன் தான். இவரை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் பாடல் காட்சிகளுக்கு ஏற்ப சிவாஜியின் நாடி நரம்பு எல்லாம் வெளியே தெரியும் படி நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த வகையில் முகபாவத்தின் மூலம் மோகனும் ஒவ்வொரு பாடலிலும் அவர் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய அற்புதக் கலைஞர்.

பாக்யராஜ் பரபரப்பு பேச்சு..

இப்படி பாக்கியராஜ் மோகனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சாது ஆனது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பேசப்படுவதோடு மட்டுமல்லாமல் உண்மையில் மோகன் தான் அந்தப் பாட்டை பாடுகிறாரா? என்று நினைக்கக் கூடிய வகையில் ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு மோகன் மீண்டும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version