ட்ரைவர் முதல் வேலைக்காரன் வரை பாரபட்சமே இல்லாமல் சில்க் ஸ்மிதா.. பிரபலம் வெளியிட்ட தகவல்…!

1970-களில் மேக்கப் கலைஞராக திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவரின் பூர்வீகம் தமிழ்நாட்டில் இருக்கும் கரூர் ஆகும். மேலும் இவர் வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை நான்காவது வகுப்போடு நிறுத்திக் கொண்ட இவர் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டார்.

நடிகை சில்க் ஸ்மிதா..

எனினும் வறுமை காரணமாக சென்னை நோக்கி வந்த இவருக்கு ஒப்பனை கலைஞராக விளங்கக்கூடிய பணி கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் இயக்குனர் மற்றும் நடிகரான வினு சக்கரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்ற தமிழ் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தில் சிலுக்கு என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானதை அடுத்து ஸ்மிதா என்ற புனை பெயரில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். வினு சக்கரவர்த்தியின் மனைவி தான் இவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார்.

வண்டிச்சக்கரம் படத்தில் நடித்த பிறகு அந்த கதாபாத்திர பெயர் அவரது பெயரோடு இணைந்து கொண்டது. இதனை அடுத்து தான் இவற்றில் ஸ்சுமிதா என்று பலராலும் அழைக்கப்பட்டார்.

மேலும் பல்வேறு படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்ற இவர் கவர்ச்சியான தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்ததாலும், கவர்ச்சி நடனம் ஆட சில படங்களில் புக் செய்யப்பட்டு உச்சகட்ட புகழை பெற்றார்.

டிரைவர் முதல் வேலைக்காரன் வரை..

இதனை அடுத்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 35 வயதிலேயே மரணம் அடைந்தார்.

தனது காந்தக் கண்களால் பலரையும் கவர்ந்த சில்க் ஸ்மிதா குறித்து இயக்குனர் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி தற்போது பேசியிருக்கும் பேச்சு பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த பேச்சில் அவர் கூறியதாவது இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் வேலைக்கு சேர்ந்த பின் நான் வேலை செய்வதை பார்த்து  சிலுக்  என்னை பாராட்டியிருக்கிறார். மேலும் சில்க் ஸ்மிதா தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் சில மாதங்கள் நானும் வேலை செய்திருக்கிறேன்.

பாரபட்சமே இல்லாமல் சில்க் ஸ்மிதா..

அப்படி அவரிடம் வேலை செய்த பின் எனக்கு இயக்குனராக மாறக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நான் படங்களை இயக்க ஆரம்பித்து விட்டேன். இந்நிலையில் ஒரு நாள் என்னை கடந்து ஒரு கார் சென்றது. அப்படி கடந்த சென்ற கார் மீண்டும் என்னை நோக்கி திரும்பி வந்தது.

சற்றும் எதிர்பார்க்காமல் நான் பார்த்திருந்த போது அந்த கார் பிரேக் போட்டு நின்றது. அந்த காருக்குள் நடிகை சில்க் ஸ்மிதா காரின் கண்ணாடிகளை இறக்கினார். அவரைப் பார்த்ததும் நான் அதிர்ந்க விட்டேன். சில்க் ஸ்மிதா என்னை பார்த்து என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்.

உங்களை மறக்க முடியுமா? என்று சொன்னதோடு அவரிடம் பேசும் போது நான் இயக்கிய படங்கள் பலவற்றை பார்த்ததாகவும், நன்றாக இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

அவரைப் பொறுத்த வரை டிரைவர் ஆக இருந்தாலும் சரி, எந்த ஒரு மேக்கப் மேனாக இருந்தாலும் தன்னிடம் வேலை செய்பவர்கள் எல்லோரையும் தனது சொந்தங்களை போல அன்போடு நடத்தக்கூடிய தன்மை கொண்டவர் என்று பேசிய பேச்சு பலரையும் வியப்பில் தள்ளியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version